Asianet News TamilAsianet News Tamil

மத்தியில் மோடி ஆட்சி...மாநிலத்தில் விஜயின் நல்லாட்சி- 2026ல் வென்றது போல் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜய் ஆட்சி அமைப்பது போலவும், பதவியேற்பு விழாவிற்கு பிரதமர் மோடி தமிழகம் வருவது போலவும் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

A poster put up by fans in Madurai as if Vijay is winning the elections with the BJP alliance KAK
Author
First Published Oct 12, 2023, 1:40 PM IST

தமிழகத்தில் அரசியல் கூட்டணி

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தமிழகத்தில் அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது. கூட்டணி கட்சிகளின் நிலையும் மாறி வருகிறது. அந்த வகையில் நான்கு ஆண்டுகளாக தொடர்ந்த பாஜக- அதிமுக கூட்டணியானது முறிந்துள்ளது. புதிய கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிச்சாமியும் திட்டமிட்டு வருகிறார்.அதேபோல பாஜகவும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கொள்ள புதிய கூட்டணியை அமைக்க வியூகம் அமைத்து வருகிறது.

பாஜக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  அதே போல நடிகர் விஜய்யை தங்கள் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

A poster put up by fans in Madurai as if Vijay is winning the elections with the BJP alliance KAK

பாஜகவிற்கு விஜய் ஆதரவா.?

முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதுரையில் பங்கேற்ற நடைபயணத்தில் விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.  எனவே விஜய் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பாரா? மாட்டாரா?  என்ற கேள்வி ஆனது எழுந்திருந்தது. இந்த நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செய்தித்தாள் வடிவில் அச்சடிக்கப்பட்டுள்ள அந்த போஸ்டரில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜயின் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மத்தியில் மோடியின் நல்லாட்சி மாநிலத்தில் விஜயின் மக்களாட்சி என்று மக்கள் பேச்சு.

A poster put up by fans in Madurai as if Vijay is winning the elections with the BJP alliance KAK

விஜய் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு

தொலைபேசியில் பாரதப் பிரதமர் விஜய்க்கு வாழ்த்து,  பதவி ஏற்பு விழாவிற்கு மோடி தமிழகம் வருகிறார். தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்தது என்று பொதுமக்கள் பேட்டி.  கூட்டணி கட்சித் தலைவர்களும் தமிழக மக்களும் நன்றி தெரிவித்தார் விஜய்.  தமிழக முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி தொண்டர்கள் கொண்டாட்டம் என அந்த போஸ்டரில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தில் நடிகர் விஜய்க்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஓ பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி, ஜான்பாண்டியன், டிடிவி தினகரன், ஜிகே வாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவிப்பது போன்ற புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்

முதல்வர் ஸ்டாலின் குறித்து இனி அவதூறாக பேசமாட்டேன்.! பல்டி அடித்த அதிமுக மாஜி அமைச்சர்-ஜாமின் வழங்கிய நீதிபதி

Follow Us:
Download App:
  • android
  • ios