Asianet News TamilAsianet News Tamil

முதல்வர் ஸ்டாலின் குறித்து இனி அவதூறாக பேசமாட்டேன்.! பல்டி அடித்த அதிமுக மாஜி அமைச்சர்-ஜாமின் வழங்கிய நீதிபதி

முதல்வர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், இனிமேல் இதுபோல் பேசமாட்டேன் என உத்தரவாதம் அளித்ததை அடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியனுக்கு  நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

AIADMK former minister Chellapandian has said that he will no longer speak defamingly about Chief Minister Stalin KAK
Author
First Published Oct 12, 2023, 1:07 PM IST | Last Updated Oct 12, 2023, 1:07 PM IST

அதிமுக சார்பாக அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் செப்டம்பர் 15ம் தேதி  பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். அப்போது கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தூத்துக்குடி எம்.பி கனிமொழி கருணாநிதி உட்பட முதல்வரின் குடும்பத்தினரை பொதுவெளியில் மிகவும் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

AIADMK former minister Chellapandian has said that he will no longer speak defamingly about Chief Minister Stalin KAK

முன்னாள் அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் விளாத்திகுளம் காவல் நிலையத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை அருவருக்கத்தக்க வகையில் இழிவாகப் பேசிய முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில்  முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மீது விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து எந்த நேரத்தில் செல்லபாண்டியனை கைது செய்யக்கூடும் என்ற தகவல் வெளியானது. இதனையடுத்து முன் ஜாமீன் கேட்டு செல்லபாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

AIADMK former minister Chellapandian has said that he will no longer speak defamingly about Chief Minister Stalin KAK

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்த போது, அரசின் செயல்பாட்டை விமர்சித்ததாகவும், முதல்வருக்கு எதிராக அவதூறாக பேசவில்லை என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் நடந்து கொள்வதாக உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்தார்.  இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 15 நாட்களுக்கு விளாத்திகுளம் போலீசில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து, செல்லபாண்டியனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios