எல்லாமே சாதி தான்.. அவர் கையில அதிமுக இருக்கு.. எடப்பாடி பாவம்.! பொன்னையன் பேசும் வைரல் ஆடியோ

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் பொன்னையன்,  ஓபிஎஸ் ஆதரவாளரான கன்னியாகுமரியை சேர்ந்த நாஞ்சில் கோலப்பனிடம் செல்போனில் பேசும் 9 நிமிட ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

9 minute audio of aiadmk Eps supporter Ponnaiyan talking to OPS supporter Nanjil Golappan from Kanyakumari viral on social media

சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதிமுக பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனிடையே இறுதியாக உயர் நீதிமன்றத்தை நம்பி இருந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு, நீதிமன்ற தீர்ப்பும் சாதகமாக அமையவில்லை. 

இதனால் கட்சி அலுவலகமான ராயப்பேட்டை அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்கள் புடை சூழ சென்றார். அங்கு ஏற்கனவே இருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், அப்போது சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியே கலவரமாக காட்சியளித்தது. அதிமுகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிமுக கட்சி அலுவலகத்துக்கும் பூட்டு போடப்பட்டது.

9 minute audio of aiadmk Eps supporter Ponnaiyan talking to OPS supporter Nanjil Golappan from Kanyakumari viral on social media

மேலும் செய்திகளுக்கு.. அதிமுக கட்சிக்கு இத்தனை கோடி சொத்து? எப்படி இருந்த கட்சி.. குமுறும் அதிமுக தொண்டர்கள்.!

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் பொன்னையன்,  ஓபிஎஸ் ஆதரவாளரான கன்னியாகுமரியை சேர்ந்த நாஞ்சில் கோலப்பனிடம் செல்போனில் பேசும் 9 நிமிட ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சுமார் 9 நிமிட ஆடியோவில், ‘தொண்டர்கள் இரட்டை இலை சின்னத்தின் பக்கம் உள்ளனர். தலைவர்கள் பணத்தின் பக்கம் உள்ளனர். அவரவர் பணத்தை பாதுகாப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு ஆடுகின்றனர். 

தங்கமணி மு.க ஸ்டாலினை டெவலப் பண்ண ஆரம்பித்துவிட்டார். தங்கமணி அவரைக் காப்பாற்றிக் கொள்ள ஸ்டாலினிடம் ஓடுகிறார். அதேபோல் கே.பி முனுசாமி ஸ்டாலினை திட்டுவதை நிறுத்திவிட்டார். பணத்தை பாதுகாப்பதற்காக இப்படி ஆடுகிறார்கள். கே.பி முனுசாமி துரைமுருகனை பிடித்து பெட்ரோல் பங்கினை வாங்கிவிட்டார். இதனால் மாதம் 2 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.

அதிமுக தொண்டர்கள் தடுமாறுகிறார்கள். கே.பி முனுசாமி ஒரு நக்சலைட்டாக இருந்தார். டி.ஜி.பி தேவாரம் கே.பி.முனுசாமி  நக்சலைட் உடன் தொடர்பு கொண்டிருக்கிறார் என‌ ஜெயலலிதாவிடம் புகார் அளித்ததும் ஜெயலலிதா கே.பி முனுசாமியை ஒதுக்கி வைத்திருந்தார். ஜெயலலிதாவிற்கு முன்பு எம்ஜிஆரும் கே.பி முனுசாமி ஒதுக்கி வைத்திருந்தார். ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் 100 கோடி, 200 கோடி ரூபாய் வைத்துள்ளனர். 

9 minute audio of aiadmk Eps supporter Ponnaiyan talking to OPS supporter Nanjil Golappan from Kanyakumari viral on social media

மேலும் செய்திகளுக்கு.. கயல் சீரியலில் வரும் கயல் தான் சின்னம்மா.. மேடையில் கண்ணீர் விட்ட திவாகரன் - சசிகலா !

எடப்பாடி பின்னால் சென்றால் தான் சம்பாதியத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தளவாய் சுந்தரம்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய புரோக்கர். முதலில் ஒற்றை தலைமை பிரச்சனையை பேசியது தளவாய் சுந்தரம் தான்.  பொதுக்குழு கூட்டத்தில் சி.வி சண்முகம் நாய் கத்துவதுபோல் கத்துகிறார். அதனால்தான் விவகாரம் நீதிமன்றம் சென்றது. எடப்பாடி ஓபிஎஸ் உடன் சமாதானமாக பேச தயாராக இருந்தார். 

ஆனால் அவருக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லை. எடப்பாடி முதுகிலேயே எம்.எல்.ஏக்கள் குத்துகின்றனர். அதனாலேயே எம்.எல்.ஏக்கள் சொல்வதை எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். சி.வி சண்முகம் கையில் சாதி அடிப்படையில் 19 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கொங்கு மண்டலத்தில் உள்ள 42 எம்.எல்.ஏக்களில் 9 எம்.எல்.ஏக்கள் மட்டுமே எடப்பாடி பக்கம் உள்ளனர்.  

கே.பி முனுசாமி ஒற்றைத்தலைமைக்கு வர முயற்சிக்கிறார். எடப்பாடி பழனிசாமி கொள்கையை விட்டுவிட்டு பதவிக்கு ஆசைப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்’ என்று கூறுகிறார்.எடப்பாடி பழனிசாமி தரப்பை அசைத்து பார்க்க இந்த ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு.. ஐ.டி ரெய்டில் மாட்டிய 500 கோடி.. சிக்கிய எடப்பாடியின் உறவினர் & வேலுமணியின் நண்பர்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios