தமிழகத்தில் 8 எம்.பி. தொகுதிகள் உள்பட 144 தொகுதிகள்.. பாஜகவின் மெகா பிளான்.. எல்.முருகனுக்கு புது அசைண்மென்ட்!
நாடு முழுவதும் 144 தொகுதிகளைத் தேர்வு செய்து வெற்றி பெற பாஜக கட்சி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
வரும் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகிவிட்டது. தமிழகத்தில் 8 தொகுதிகள் உள்பட பல தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்களை அக்கட்சி நியமித்துள்ளது. புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மூன்று நாள் பயணமாக புதுச்சேரிக்கு வந்தார். இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். பின்னர் புதுச்சேரி மீனவ மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “மீனவர்களுக்காக தனி அமைச்சகம் அமைத்து கொடுத்தது பிரதமர் மோடிதான்.
இதையும் படிங்க: இளையராஜா எம்.பி ஆகலாம் ஆனால் தாமரை மலராது தம்பி.. பாஜகவினரை வெறுப்பேற்றும் கே.ராஜன்.
அதற்கு முன்பு வரை மீனவர் மேம்பாட்டு பணிக்காக ரூ. 3 ஆயிரம் கோடி மட்டுமே செலவிடப்பட்டது. தற்போது ரூ. 32 ஆயிரம் கோடி மீனவர் மேம்பாட்டு பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடல் வளத்தை பாதுகாக்கவே மீன் வள சட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். கடலில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் என்ன நடைமுறை இருக்கிறதோ அதே நடைமுறைதான் தற்போதும் உள்ளது. கூடுதலாக வேறு ஏதுமில்லை. 200 மைலுக்கு அப்பால், வெளிநாட்டு கப்பல்களை கட்டுப்படுத்த மட்டுமே இந்தச் சட்டம் இருக்கும். கிட்டத்தட்ட 100 கிராமங்கள் இந்தியா முழுவதும் அடையாளம் கண்டிருக்கிறோம். ஒவ்வொரு கிராமத்துக்கும் அடிப்படை வசதிகளுக்காக ரூ. 5 கோடி ஒதுக்கப்படுகிறது" என்று மீனவர்களிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுகிறதா பாஜக.? அண்ணாமலையின் 25 தொகுதிகள் டார்கெட்டின் சூட்சுமம் என்ன?
இந்தக் கலந்துரையாடலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தொகுதி பொறுப்பாளர்களைச் சந்தித்தார். அவர்கள் மத்தியில் முருகன் பேசுகையில், " நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். வரும் 2024-ம் ஆண்டு தேர்தலில், தமிழகம், புதுச்சேரி, ஒடிசா, மேற்கு வங்காளம் உள்பட பல மாநிலங்களில் 144 தொகுதிகளைத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிகளில் பாஜக கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அதில், புதுச்சேரி தொகுதியும் ஒன்று. தென்னிந்தியாவில் கர்நாடகாவுக்கு பிறகு புதுச்சேரியில்தான் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்திருக்கிறதுது. தமிழ் மண்ணில் பாஜகவின் ஆட்சி அமைய வேண்டும். நம்முடைய ஒரே எண்ணம் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதாக இருக்க வேண்டும். அதற்கான பணிகளை நாம் உடனடியாகத் தொடங்க வேண்டும். பிரதமர் மோடி தலைமையில் கடந்த 8 ஆண்டு கால பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்”. என்று எல். முருகன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பால் தாக்கரே - கருணாநிதி குடும்பங்களுக்கு இடையே என்னவெல்லாம் ஒற்றுமை.? ஒரு முடிவில் இருக்கும் பாஜக!