பால் தாக்கரே - கருணாநிதி குடும்பங்களுக்கு இடையே என்னவெல்லாம் ஒற்றுமை.? ஒரு முடிவில் இருக்கும் பாஜக!
தமிழகத்தில் திமுக ஆட்சியிலிருந்தும் ஏக்நாத் ஷிண்டே ஒருவர் உருவாவார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வரும் நிலையில், சிவசேனாவுக்கும் திமுகவுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை விளக்கும் படத்தை வெளியிட்டுள்ளார் பாஜக நிர்வாகி.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வந்த மகா விகாஷ் அகாடி ஆட்சியை சிவசேனாவிலிருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே கவிழ்த்தார். இதனையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர மாநில முதல்வராகியிருக்கிறார். மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே ஆட்சியைக் கட்சியில் இருந்த முக்கியமான அமைச்சரே கவிழ்த்த நிலையில், தமிழகத்திலும் திமுக ஆட்சியிலிருந்து ஏக்நாத் ஷிண்டே உருவாவார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த இரண்டு நாட்களாகப் பேசி வருகிறார். இதனையடுத்து ஏக்நாத் ஷிண்டே போல திமுகவில் உள்ள ஒரு அமைச்சர் 40 எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறினால், ஆட்சி மாறிவிடும் என்றெல்லாம் பாஜகவினர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: தமிழகத்தில் ஏக்நாத் ஷிண்டே அதே பெயரில் இருக்க வேண்டும் என்பதில்லை..! வேறு பெயரிலும் இருக்கலாம் - அண்ணாமலை
பாஜகவினரின் இதுபோன்ற பேச்சுக்கு, ‘தமிழகம் மகாராஷ்ரமும் அல்ல; ஸ்டாலின் உத்தவ் தாக்கரேவும் இல்லை’ என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள். இருந்தாலும் அண்ணாமலை இன்றும் திமுகவில் உருவாகப் போகும் அந்த ஷிண்டே யாராக இருப்பார் என்ற ரேஞ்சுக்கு பேட்டி அளித்திருக்கிறார். மேலும் தாக்கரே குடும்பத்தினரும் கருணாநிதி குடும்பத்தினருக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைக் கூறி டெம்போ ஏற்றி வருகிறார் அண்ணாமலை. மேலும் சிவசேனா கட்சியில் பால் தாக்கரேவின் பேரன் ஆதித்யா தாக்கரேவுக்கு அதிகம் முக்கியத்துவத்தை உத்தவ் தாக்கரே கொடுத்ததால்தான் ஏக்நாத் ஷிண்டே எதிராக கிளம்பினார் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: நான்கு நியமன எம்.பி.க்களும் தென்னிந்தியர்கள்.. பாஜகவின் ‘ஆப்ரேஷன் லோட்டஸ்’ தென்னிந்தியாவில் தொடங்கியதா?
இதையும் படிங்க: உதயநிதிக்கு பதவியா..? திமுகவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே போல் MLAக்கள் வெளியே வருவார்கள்- வேலூர் இப்ராஹிம்
ஏற்கனவே உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று திமுகவில் அமைச்சர்கள் தொடங்கி பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். அப்படி திமுக அமைச்சரவை விரிவாக்கம் செய்தால், அதில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் ஆக்கினால் தமிழகத்திலும் ஒரு ஷிண்டே புறப்படுவார் என்று அண்ணாமலைத் தெரிவித்திருந்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மட்டும் இப்படி பேசவில்லை. தமிழகத்திலும் மகாராஷ்டிரா நிலைமை உருவாக்கி வருவதை விளக்கும் வகையில் தமிழக பாஜக நிர்வாகி நிர்மல் குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிவசேனாவுக்கும் திமுகவுக்கும் இடையே ஒற்றுமையை விளக்கும் படத்தை வெளியிட்டிருக்கிறார். அதோடு, “தமிழகத்தின் ஷிண்டே யார்?” என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்.