தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் நோய்க்கு சிகிச்சை அளிக்க புதிய மருந்து! இந்தியாவில் எப்போது கிடைக்கும்?

தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் பிரச்சனை உள்ளவர்களுக்கு புதிய மருந்து ஒன்று அறிமுகமாகியுள்ளது. Zepbound என்ற இந்த மருந்து உடல் எடையைக் குறைத்து மூச்சுத்திணறலைக் கட்டுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Zepbound drug gets US FDA approval to treat sleep apnea; When is it available in India? Rya

தூக்கத்தின் போது ஒழுங்கற்ற சுவாசத்தால் ஏற்படும் சிலருக்கு மூச்சத்திணறல் நோய் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைபு முதன்முறையாக, நீரிழிவு எதிர்ப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்து Zepbound என்ற பெயரில் விற்கப்படுகிறது. உடல் பருமன் கொண்ட பெரியவர்கள் உடல் எடையை குறைக்க இந்த மருத்து பயன்படுத்தப்படுகிறது.

தற்போது மிதமான முதல் கடுமையான தூக்க மூச்சுத்திணறலுக்கான சிகிச்சைகள் CPAP மற்றும் BI-PAP போன்ற உதவி சுவாச சாதனங்களைப் பயன்படுத்துகின்றன.

அனைத்து ஒப்புதல்களையும் பெற்ற பின்னர் 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் Mounjaro என்ற பெயரில் ஊசி போடக்கூடிய மருந்துகள் விநியோகம் செய்யப்படும் என்று Zepbound நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் எல்லி லில்லி கூறினார். எனினும் இந்த மருந்தின் விலை இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இதுகுறித்து பேசிய எல்லி லில்லி " மருத்துவத்தின் செயல்திறனையும், வகை 2 நீரிழிவு மற்றும் உடல் பருமனின் ஒட்டுமொத்த சுகாதார மற்றும் பொருளாதார சுமையை குறைப்பதில் கருத்தில் கொண்டு, இந்த மருந்தின் விலை நிர்ணயிக்கப்படும்" என்று கூறினார்.

நோய்களின் ஆபத்தை தடுக்கனுமா? மன ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் டிப்ஸ்!

ஏறக்குறைய, 104 மில்லியன் இந்தியர்கள் தூக்க மூச்சுத்திணறல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளது.  47 மில்லியன் பேர் மிதமான அல்லது கடுமையான ஓஎஸ்ஏவைக் கொண்டுள்ளனர் என்று ஸ்லீப் மெடிசின் மதிப்புரைகளில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூத்த மருத்துவர் ஒருவர் பேசிய போது " தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் நோய்க்கான சிகிச்சையில் ஒன்று எடை குறைப்பு. இந்த மருந்து எடையைக் குறைக்க உதவுகிறது, எனவே, தூக்கத்தின் போது சுவாசத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே, இது நிச்சயமாக ஒரு கேம் சேஞ்சராக இருக்கும். ஆனால் நீண்ட கால முடிவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

நீங்கள் வாங்கும் மருந்து உண்மையா? போலியா? கண்டுபிடிக்க ஈசியான டிப்ஸ்!

ஒருவ்ர் தூங்கும் போது, அவரின் மேல் காற்றுப்பாதை தடுக்கப்படும்போது மூச்சுத்திணரல் ஏற்படுகிறது, இதனால் தூக்கத்தின் போது சுவாசிக்க தடை ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios