பிளாஸ்டிக் கவரில் காய்கறிகளை ஏன் சேமித்து வைக்கக் கூடாது என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
கடைகளிலிருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கிட்டு வந்தால் மட்டும் போதாது. அவற்றை முறையாக சேமிப்பது ரொம்பவே முக்கியம். பொதுவாகவே சந்தையிலிருந்து வாங்கிட்டு வரும் பழங்கள், காய்கறிகளை பிளாஸ்டிக் கவர்களில் கட்டி பிரிட்ஜில் வைத்து விடுவோம். கிட்டத்தட்ட இந்த பழக்கம் நம் அனைவரின் வீடுகளிலும் பின்பற்றப்படுகிறது.
ஆனால் இந்த பழக்கத்தை உடனே நிறுத்தி விடுங்கள். இல்லையெனில் உயிருக்கு ஆபத்து. ஆம், பிளாஸ்டிக் பை அல்லது டப்பாக்களில் காய்கறிகளை சேமிப்பது ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கை விளைவிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளன.
பிளாஸ்டிக் பைகளில் ஏன் காய்கறிகளை வைக்க கூடாது?
1. பொதுவாகவே பிளாஸ்டிக் பைகள் பெட்ரோலியம் பொருட்களில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. அதில் பிஸ்பினால், தாலேட்ஸ் போன்ற ரசாயனங்கள் உள்ளன. அவை காய்கறிகளுடன் நேரடியாக தொடர்புகொண்டு உணவில் கலந்து உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
2. காய்கறி, பழங்களை பிளாஸ்டிக் கவரில் வைக்கும் போது அவற்றில் காற்று செல்லாது. இதனால் காய்கறிகளில் இருந்து வரும் ஈரமானது பைக்குள்ளேயே தங்கி பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சை வளர்ச்சிக்கு காரணமாகின்றன. இதன் விளைவாக காய்கறிகள் சீக்கிரமாகவே அழுகி போய்விடும். அதுமட்டுமன்றி, காய்கறிகள் மீது இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களானது உணவில் கலந்து உணவை விஷமாக மாற்றி விடும்.
3. பிளாஸ்டிக் பைகள் காற்று புகாதவை என்பதால், காய்கறிகள் சீக்கிரமாகவே கெட்டுப் போவது மட்டுமல்லாமல், சத்துக்களையும் இழக்க நேரிடும்.
4. அதுமட்டுமில்லாமல் பிளாஸ்டிக் பெரிய ஆபத்தையும் ஏற்படுத்தும். ஏனெனில் இது மக்குவதற்கு பல வருஷங்கள் ஆகும். இதனால் அது மண் மற்றும் தண்ணீரை மாசுப்படுத்,தி விலங்குகளுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
காய்கறிகளை எப்படி சேமிக்கலாம்?
- காய்கறிகளை வாங்க துணி பைகளை பயன்படுத்துங்கள். இது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சுற்றுச்சூழலுக்கும் நல்லது. மேலும் இதை பல முறைகளிலும் பயன்படுத்தலாம்.
- துணி பைகளில் காய்கறிகளை வைத்தால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து சேமிக்க வேண்டும் இதனால் காய்கறிகள் கெட்டுப்போகாது.
- காய்கறிகளை ஃப்ரிட்ஜில் சேமிப்பதற்கு ஸ்டீல் கண்டைனர்களை பயன்படுத்துங்கள். அதுவும் காற்று புகக் கூடிய டப்பாக்கள் தான் நல்லது.
- கண்ணாடி டப்பாக்களையும் பயன்படுத்தலாம். அதுவும் பாதுகாப்பானது தான்.
- சின்ன சின்ன ஓட்டைகள் இருக்கும் பைகளில் காய்கறிகளை சேமிப்பது பாதுகாப்பானது. இதனால் காற்று சுலபமாக செல்லும். காய்கறிகளும் நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்கும்.
பிளாஸ்டிக் கவர்களில் காய்கறிகளை வைப்பது எவ்வளவு ஆபத்து என்பதை இப்போது நீங்கள் புரிந்திருப்பீர்கள். எனவே உங்களது ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் நன்றாக இருக்க இனி பிளாஸ்டிக் பைகளில் காய்கறிகளை வைப்பதை நிறுத்தி விடுங்கள்.
