உங்கள் கைகளை வைத்தே உங்களது உடல் ஆரோக்கியத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். அது எப்படி என்று இங்கு காணலாம்.
நம் உடலில் மிக முக்கியமான உறுப்பு எதுவென்றால், கைகள் தான். எந்தவொரு செயலையும் செய்வதற்கு கைகள் தான் தேவைப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், நம்முடைய கைகள் வைத்து உடல் ஆரோக்கியத்தை கணிக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது மிகவும் ஆபத்தான நோய்களை கூட கைகளைக் கொண்டு கணித்து விடலாம். உதரணமாக கல்லீரல் நோய், தைராய்டு பிரச்சனை போன்றவற்றை கைகளைப் பார்த்து கண்டுபிடித்துவிடலாம். சரி இப்போது இந்த பதிவில் உடல் ஆரோக்கியம் பற்றி கைகள் என்ன சொல்லுகின்றது என்று தெரிந்து கொள்ளலாம்.
1. அடர் சிவப்பு நிறத்தில் கைகள் :
அடர் சிவப்பு நிறத்தில் உங்களது கைகள் இருந்தால் உங்களுக்கு கல்லீரல் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். அதுவே கர்ப்பிணிகளின் கைகள் சிவப்பு நிறத்தில் இருந்தால் அது சாதாரணமானது தான். அதாவது கைகளில் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.
2. மோதிர விரல் நீளமாக இருந்தால் :
பெண்களின் ஆள்காட்டி விரலை விட அவர்களது மோதிர விரல் நீளமாக இருந்தால் அவர்களுக்கு ஆஸ்டியோபோராசிஸ் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று அர்த்தம்.
3. விரல்கள் வீக்கமாக இருந்தால் :
உங்களது விரல்கள் வீங்கி இருந்தால் உங்களுக்கு ஹைப்போ தைராய்டிசம் இருக்கிறது என்று அர்த்தம். அதுபோல தைராய்டு சுரப்பில் ஹார்மோன்கள் குறைவாக சுரக்கப்பட்டால் அது மெட்டாபாலிசத்தை குறைத்து உடலில் நீரை தேக்கி வைத்து குண்டாக காண்பிக்கும்.
4. வெளிர் நகங்கள் :
உங்களது நகங்கள் வெளிர் நிறத்தில் இருந்தாலோ அல்லது வெள்ளையாக இருந்தாலோ உங்களுக்கு இரத்த சோகையை இருக்கிறது என்று அர்த்தம். இரும்புச்சத்து குறைபாட்டால் தான் இந்த நிலை ஏற்படும். எனவே இரத்த சோகைக்கு உரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.
5. நகங்களுக்கு கீழே சிவப்பு கோடு இருந்தால் :
உங்கள் கை விரல்களின் நகங்களுக்கு கீழே சிவப்புக்கோடு இருந்தால் உங்களது இரத்தத்தில் தொற்று அல்லது உங்களுக்கு இதய நோய் இருக்கிறது என்று அர்த்தம். இதய வால்வுகளில் ஏதேனும் தொற்றுக்கள் இருந்தாலும் இந்த அறிகுறி தெரியும்.
6. நீல நிறத்தில் விரல் நுனிகள் இருந்தால் :
உங்களது கை விரலின் நுனியானது நீல நிறத்தில் உணர்வின்றி இருந்தால் உடலில் இரத்த ஓட்டம் ரொம்பவே பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம். எனவே உடனே மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.
