உங்களது கட்டைவிரலின் அமைப்பு மற்றும் வடிவத்தை வைத்து உங்களின் குணாதிசயங்களை பற்றி எளிதாக அறிந்து கொள்ளலாம் தெரியுமா? அது எப்படி என்று இங்கு காணலாம்.

நாம் ஒவ்வொருவருக்கும் எதிர்காலத்தை பற்றி தெரிந்துகொள்வதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கும். இதற்காக பலர் கை ரேகை கூட பார்ப்பார்கள். அதுபோல தான் ஒருவரது உடல் உறுப்புகளின் வடிவம் மற்றும் அமைப்பு வைத்து அவரது குணாதிசயங்களை அறிந்து கொள்ள முடியும் என்று சாமுத்ரிகா சாஸ்திரம் சொல்லுகின்றது. அந்த வகையில் ஒருவரது பெருவிரல் அல்லது கட்டை விரலின் அளவு மற்றும் வடிவத்தை வைத்து அவரது குணாதிசயங்களை சொல்லிவிடலாம். நீங்களும் உங்களது குணாதிசயத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள் என்றால் இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கட்டைவிரல் நேராக இருந்தால்..

உங்களது கட்டைவிரல் நேராக இருந்தால் நீங்கள் நன்கு பகுத்தறிவு ஆற்றல் மற்றும் தர்க்கரீதியான மனநிலையை கொண்டிருப்பீர்கள் என்று அர்த்தம். ஏதாவது ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னர் அது குறித்து பல முறை நீங்கள் யோசிப்பீர்கள். சிறந்த தலைமைத்துவ அல்லது வழிகாட்டு திறன்கள் உங்களுக்குள் இருக்கும். அதுமட்டுமில்லாமல் சுய கட்டுப்பாடு மற்றும் அதிகார உணர்வும் உங்களிடம் உண்டு. உங்களை சுற்றி உள்ளவர்களை பற்றி நீங்கள் நன்கு அறிந்து வைத்திருப்பீர்கள். இதனால் அவ்வளவு எளிதாக உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. மேலும் உங்களது நம்பிக்கையை பெறுவது என்பது கடினமான காரியம். உங்களை யாரும் பயன்படுத்திக் கொள்ளவே முடியாது. எப்போதுமே விழிப்புடனே இருப்பீர்கள். ஆபத்து வருகிறது என்றால் அதற்கு முன்பே அதை உணர்ந்து கொள்வீர்கள். எப்பேர்ப்பட்ட கடினமான சூழ்நிலை வந்தாலும் கனிவாக தான் இருப்பீர்கள். உங்களிடம் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். ஒழுக்கம் மற்றும் மன உறுதி உங்களிடம் இருக்கும்.

கட்டைவிரல் வளைந்து இருந்தால்..

உங்களது கட்டைவிரல் வளைந்து இருந்தால் நீங்கள் அதிக உணர்ச்சிபடும் மற்றும் வெளிப்படையாக பேசும் குணமுடையவர்கள். சூழலுக்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். பிறர் மீது அதிகமாக அனுதாபம் காட்டுவீர்கள். இதனால் உங்களது உணர்ச்சிகளை பிறர் பயன்படுத்தி தங்களது வேலையை நிறைவேற்றிக் கொள்வார்கள். நீங்கள் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். சுய பாதுகாப்பு குறித்த அறிவு வளர்த்துக் கொள்வதற்கு அதிக நேரம் எடுப்பீர்கள். இலக்குகளை அடைய வழக்கத்திற்கு மாறான பாதைகளை தேர்ந்தெடுப்பீர்கள். தொழிலில் எப்போதுமே கவனக் குறைவாக இருப்பீர்கள்.

கட்டைவிரல் மெல்லியதாக இருந்தால்..

உங்களது கட்டைவிரல் மெல்லியதாக அல்லது ஒல்லியாக இருந்தால் நீங்கள் ரொம்பவே தைரியமானவர்கள்.எந்த விஷயத்திற்கும் அஞ்சமாட்டீர்கள் வியாபாரத்தில் ரிஸ்க் எடுத்தாவது வெற்றியை பெறுவீர்கள். நீங்கள் கடினமாக உழைத்தாலும் கூட ஆடம்பர வாழ்க்கையை தான் வாழ விரும்புவீர்கள். முக்கியமாக உங்களிடம் பண ஆசை அதிகமாகவே இருக்கும்.

கட்டைவிரல் சிறியதாக இருந்தால்..

உங்களது கட்டைவிரல் சிறியதாக இருந்தால் நீங்கள் தத்துவ ஞானிகளாக இருப்பீர்கள். பிறர் மனதில் இருப்பதை எளிதில் அறிந்து கொள்ள உங்களால் முடியும். உங்களிடம் இருக்கும் நல்ல விஷயம் என்னவென்றால் நல்ல காரியங்களை உடனே ஏற்றுக் கொள்வீர்கள். கெட்ட விஷயம் என்னவென்றால், மோசமான விஷயங்களை நீண்ட நாள் நினைத்துக் கொண்டே இருப்பீர்கள்.

கட்டைவிரல் தடிமனாக இருந்தால்..

உங்களது கட்டை விரல் தடிமனாக இருந்தால் அதிகம் கோபம் படும் குணம் உங்களிடம் இருக்கும். நீங்கள் கோபப்படும்போது உங்களது சுய கட்டுப்பாட்டை இழப்பீர்கள். முக்கியமாக கோபப்படும் சமயத்தில் உங்களை சாந்தப்படுத்துவது மிகவும் கடினம். சில சமயங்களில் கோபத்தால் உங்களை நீங்களே தாக்கிக் கொள்வீர்கள். ஆனால் உங்களிடம் இருக்கும் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் நீங்கள் மனதளவில் ரொம்பவே மென்மையானவர்கள்.