Personality Test : நீங்கள் பேனா பிடித்திருக்கும் ஸ்டைல் வச்சி உங்களை பற்றி தெரிஞ்சுக்கலாம் தெரியுமா..?

நீங்கள் பேனா பிடித்திருக்கும் ஸ்டைல்   உங்கள் ஆளுமையை பிரதிபலிக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா...? ஆனால், அதுதான் உண்மை. இது ஒரு நபரின் இயல்பு, பண்புகள் மற்றும் அவரது முழுமையான ஆளுமை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. 

pen holding style personality test your style of holding pen reveals your lots of secret personality traits in tamil mks

பேனா பிடித்திருக்கும் ஸ்டைல் ஒவ்வொரு நபருக்கும் வேறுப்படும். சிலர் கட்டைவிரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் இடையே பேனாவை பிடித்திருப்பார்கள். மற்றவர்களோ, தங்கள் ஆள்காட்டி மற்றும் நடுவிரலுக்கு இடையில் பேனா பிடித்திருப்பார்கள். உங்களுக்கு தெரியுமா..நீங்கள் பேனா பிடித்திருக்கும் ஸ்டைல்   உங்கள் ஆளுமையை பிரதிபலிக்கும் என்று. ஆனால், அதுதான் உண்மை. இது ஒரு நபரின் இயல்பு, பண்புகள் மற்றும் அவரது முழுமையான ஆளுமை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. எனவே, இப்போது நீங்கள் பேனா பிடித்திருக்கும் விதத்தை வைத்து உங்களது ரகசியங்களை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலுக்கு இடையே...
உங்கள் கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் உங்களுக்கு பேனா பிடிக்கும் பழக்கம் இருந்தால், நீங்கள் புதிய விஷயங்களைச் செய்யவும், புதிய வழியில் வாழ விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். அதுமட்டுமின்றி, நீங்கள் புதிய அனுபவங்களைப் பெறவும், புதிய இடங்களை ஆராயவும் விரும்புகிறீர்கள் என்பதை காட்டுகிறது. குறிப்பாக, நீங்கள் ஒரு மர்மமான நபர், உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமங்களை சந்திக்க நேரிடும்.

இதையும் படிங்க:  விரலின் நீளம் நீங்கள் எவ்வளவு பெரிய பணக்காரர் என்பதை சொல்லும் தெரியுமா? மிஸ்பண்ணிடாதீங்க..!

கட்டை விரலால் அழுத்தி பிடிப்பது:
உங்கள் கட்டைவிரலால் பேனாவை அழுத்தி பிடித்தால், உங்கள் ஆளுமைப் பண்புகள் பிட், நீங்கள் மிகவும் சுறுசுறுப்பான நபர் என்று அர்த்தம்.நீங்கள் செல்வாக்கு மற்றும் லட்சியம் உள்ள நபர். நீங்கள் யாரிடமாவது மகிழ்ச்சியாக இருந்தாலோ அல்லது கோபமாக இருந்தாலோ உங்கள் உணர்வுகளை யார் முன்னிலையிலும் வெளிப்படுத்த மாட்டீர்கள். குறிப்பாக, நீங்கள் கண்மூடித்தனமாக நம்பக்கூடிய நபர். 

இதையும் படிங்க:  Sleeping Position : நீங்கள் தூங்கும் விதம்..உங்கள் குணத்தை பற்றிய ரகசியங்களை சொல்லும் தெரியுமா?

ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் இடையில்..
உங்கள் ஆள்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் பேனாவைப் பிடித்தால், நீங்கள் சமூக வாழ்க்கையை அனுபவிக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் யாரை அதிகம் நம்புகிறீர்களோ அல்லது யாருடன் உங்களுக்கு ஆழ்ந்த தொடர்பு இருக்கிறதோ அவர்களுடன் மட்டுமே உங்கள் விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறீர்கள். நீங்கள் எதிர்மறையான விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதில்லை. மேலும் மோசமான நினைவுகள் அல்லது சம்பவங்களை விரைவாக விட்டுவிடுவீர்கள். உங்கள் அமைதியான மற்றும் கண்ணியமான இயல்பு உங்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் உங்களை பிடித்தவராக ஆக்குகிறது. 

கட்டைவிரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் இடையே...
இப்படிப்பட்ட நபர்களிடம் ஆளுமையில் இரண்டு அம்சங்கள் இருக்கலாம். சூழ்நிலையைப் பொறுத்து நீங்கள் உணர்ச்சிவசப்படலாம். சில சமயங்களில் நீங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிறீர்கள். சில சமயங்களில் சின்னச் சின்ன விஷயங்களுக்கு கூட கோபப்படுவீர்கள். பொதுவாகவே, நீங்கள் மென்மையாகவும், கனிவாகவும் இருப்பீர்கள். ஆனால் நேரம் வரும்போது விமர்சகராகவும் கூட மாறுவீர்கள். நீங்கள் அடிக்கடி விஷயங்களை அல்லது நபர்களைப் பற்றி கடுமையான கருத்துக்களை உருவாக்குவீர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios