காய்கறிகள் வாங்க போறீங்களா?! அப்போ இப்படி பாத்து வாங்குங்க.. தரமானத வாங்கலாம்!
How To Buy Vegetables : காய்கறிகள் வாங்க செல்லும்போது எது நல்லது கெட்டது என்று கண்டுபிடிக்க தெரியவில்லை என்றால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் நிச்சயம் உங்களுக்கு உதவும்.
காய்கறிகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக, குளிர்காலத்தில் புதிய காய்கறிகளை சாப்பிடுவது உடலுக்கு பல வகையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. ஆனால், பல சமயங்களில் நாம் மார்கெட்டில் காய்கறிகள் வாங்கும் போது பார்ப்பதற்கு நன்றாக தான் இருக்கும். ஆனால், உண்மையில் வீட்டிற்கு சென்று பார்க்கும் போது தான் அது கெட்டுபோனது என்று நமக்கு தெரியும். இதனால் பலர் காய்கறிகள் வாங்கும் போது தரமானதை வாங்குவது எப்படி என்று குழப்பத்திலேயே இருப்பார்கள்.
ஆனால், நீங்கள் காய்கறிகளை வாங்கும் போது, அதைத் தொட்டுப் பார்த்து அதன் தன்மையே நீங்கள் சுலபமாக கண்டறிந்து விடலாம். எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை மட்டும் நீங்கள் மனதில் வைத்தால் போதும், நல்ல மற்றும் பிரஷான காய்கறிகளை வாங்கலாம். மேலும், உங்கள் பணமும் வீணாகது. எனவே, காய்கறிகளை எப்படி வாங்க வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.
தரமான காய்கறிகளை வாங்க சில டிப்ஸ்:
1. தேங்காய்:
தேங்காயின் வெளிப்பகுதி ரொம்பவே வெள்ளையாகவும், கருப்பாகவும் இருக்கக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பழுப்பு நிறத்தில் தான் இருக்க வேண்டும். அது போல தேங்காயின் குடுமி ஈரமாகவும் இருக்கவே கூடாது. தேங்காயை கையில் வைத்து பார்க்கும் போது அது கனமாகவும், ஆட்டி பார்க்கும்போது அதில் இருக்கும் தண்ணீர் குறைவாகவும் இருக்க வேண்டும்.
2. சுரைக்காய்:
சுரைக்காய் வாங்கும் போது அது மிகவும் மெல்லியதாகவோ அல்லது தடிமனாகவோ இருக்க கூடாது. நேராக அல்லது சற்று வளைவாக இருக்க வேண்டும். மேலும் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும்.
3. வெண்டைக்காய்:
நீங்கள் வெண்டைக்காய் வாங்குகிறீர்கள் என்றால், அதன் பின்புறத்தில் உள்ள முனையை உடைத்து சரி பார்க்கவும். உடைக்கும் போது அது எளிதில் உடைந்தால் அது நல்லது. அதுபோல, மிகவும் தடிமனாகவோ அல்லது சின்னதாகவோ இருக்கும் வெண்டைக்காயை வாங்க வேண்டாம்.
4. கத்தரிக்காய்:
கத்தரிக்காய் வாங்கும் போது அதில் ஓட்டைகள் இருந்தால் புழு, பூச்சிகள் அதில் இருக்கும். எனவே, ஓட்டைகள் இருக்கும் கத்தரிக்காய் வாங்க கூடாது. அதுபோல எடை குறைவாக உள்ள கத்தரிக்காயை வாங்குங்கள்.
இதையும் படிங்க: குக்கரில் விசில் அடிக்கும் போது தண்ணீர் லீக் ஆகுதா? அப்ப 'இத' மட்டும் தெரிஞ்சு வச்சுக்கோங்க இனி எப்பவும் வராது
5. வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காய் கரடு முரடாக இருந்தால் அது நல்லது. மிருதுவாக இருந்தால் அது கலப்பினம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
6. வெங்காயம்:
வெங்காயத்தை நீங்கள் வாங்கும் போது அதை அழுத்தி பாருங்கள். அது ஈரமாக இருந்தால் வாங்க கூடாது. அது போல வெங்காயம் வாலோடு இருந்தாலும் வாங்கவே கூடாது.
7. வாழைக்காய்:
வாழைக்காய் வாங்கும் போது அதன் காம்பை உடைத்து பார்க்கும் போது வெள்ளையாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மற்றும் சற்று இலசலாகவும் இருந்தாலும் வாங்கலாம்.
8. முருங்கைக்காய்:
முருங்கைக்காய் நல்ல கரும்பு பச்சை நிறத்திலும், சற்று படிமனாகவும், உருண்டையாகவும் இருந்தால் வாங்கலாம். மஞ்சள் நிறத்திலோ அல்லது விதைகள் வெளியே தெரியும்படி இருந்தால் அது வாங்கவே கூடாது. அது முற்றிலும் காயானது. அது போல பட்டையாக இருந்தாலும் வாங்க வேண்டாம்.
9. பீன்ஸ்:
பீன்ஸ் நல்ல பச்சை நிறத்திலும், உடைக்கும் போது சட்டென்று உடைய வேண்டும். இதுதான் ருசியானது.
இதையும் படிங்க: கேஸ் சிலிண்டரை இப்படி யூஸ் பண்ணுங்க.. நீண்ட நாள் சேமிக்கலாம்..!
10. தக்காளி:
தக்காளி பார்ப்பதற்கு நல்ல கெட்டியாக இருக்க வேண்டும். முரடாக இருந்தால் வாங்க கூடாது. ஏனெனில், அதன் சதை பகுதி குறைவாக தான் இருக்கும். அதுபோல அதன் காம்பு அருகே பச்சையாகவும் அடிப்பக்கம் சிவப்பாகவும் இருந்தால் வாங்கலாம்.
11. முட்டைகோஸ்:
முட்டைக்கோசை வாங்கும்போது அதன் காம்பு பகுதியை முகர்ந்து பாருங்கள். அதில் நாற்றமடித்தால் அது பழையது. நாற்றமடிக்கவில்லை என்றால் அது புதியது. அதுபோல இலைகள் வெள்ளையாக இருந்தால் அதை வாங்காதீர். அது சுவையை கொடுக்காது. மேலும், அதன் இதழ்கள் நெருக்கமாக இருக்க வேண்டும்.
12. பீர்க்கங்காய்:
பீர்க்கங்காய் நல்ல பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். அதன் மேல் வெள்ளை புள்ளிகள் இருந்தாலோ அல்லது அதன் காம்பு வறண்டு இருந்தாலோ அதை வாங்க வேண்டாம். அது முற்றிலும் முற்றலானது.
13. எலுமிச்சை பழம்:
எலுமிச்சை பழம் நல்ல மஞ்சள் நிறத்திலும் அதன் தோல் மெல்லியதாகவும் இருந்தால் வாங்குங்கள். அதுபோல அதன் காம்பு அருகே கண்ணியிருந்தால் அது நாள்பட்ட பழம். எனவே, அதை வாங்க வேண்டாம்.
14. பச்சை மிளகாய்:
பச்சை மிளகாயின் காய் காம்பு நல்ல பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். ஒருவேளை, அதன் காம்பு சுருங்கி இருந்தாலோ, கருப்பாக இருந்தாலோ அதை வாங்க வேண்டாம். ஏனெனில், அது பழையது.
15. உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கு வாங்கும் போது அதன் அளவில் பெரியதாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள் அதுபோல பச்சை நிறம் வெளியே தெரிந்தால் அதை வாங்கவே கூடாது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D