கேஸ் சிலிண்டரை இப்படி யூஸ் பண்ணுங்க.. நீண்ட நாள் சேமிக்கலாம்..!
கேஸ் சிலிண்டர் நீண்ட நாள் சேமிக்க சில வழிகள் இங்கே உள்ளன. அவை..

கேஸ் சிலிண்டரரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சொல்கிறது. எவ்வளவுதான் இல்லத்தரசிகள் சிக்கனமாக பயன்படுத்தினாலும் கேஸ் தீர்ந்துவிடுவதால், அவர்களுக்கு பெரும் தலைவலியை உண்டாக்குகிறது.
அதுபோல கேஸ் விரைவில் தீராமல் இருக்க இல்லத்தரசிகள் பல விஷயங்களை செய்கிறார்கள். உதாரணமாக, முன்கூட்டியே பருப்பை ஊறவைத்து சமைப்பது, ஒரே நேரத்தில் சமையலை செய்து முடிப்பது இதுபோன்ற பல விஷயங்கள் உள்ளன. இருந்தபோதிலும், கேஸ் விரைவில் தீர்ந்து போகிறது. இதற்கு சில குறிப்புகளை பின்பற்றினால் இரண்டு மாதத்திற்கு மேலாக கேஸ் சிலிண்டர் நீடிக்கும்.
கேஸ் சிலிண்டர் நீண்ட நாள் சேமிக்க வழிகள்:
பெரும்பாலானோர் ஈரமான பாத்திரங்களை அடுப்பில் வைத்து சமைப்பார்கள். ஆனால், இப்படி செய்தால் கியாஸ் சீக்கிரமே தீர்ந்து போய்விடும். மேலும் ஈரமான பாத்திரம் விரைவில் சூடாகாது. எனவே, ஈரமான பாத்திரத்தை ஒரு துணியால் துடைத்து அடுப்பில் வைக்கவும். இதனால் கேஸ் நீண்ட நாள் பயன்படுத்தலாம்.
பொதுவாகவே, அரிசி பருப்பு, தானியங்கள் சமைக்க அதிக நேரம் எடுக்கும். இதனால் கேஸ் விரைவில் செலவாகும். எனவே, நீங்கள் இவற்றை சமைப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் ஊறவைத்து பிறகு சமைத்தால் கேஸ்சும் வீணாகாது, சமையலும் விரைவில் முடியும்.
இதையும் படிங்க: குட் நியூஸ்.. சமையல் எரிவாயு விலை குறைந்தது... 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை எவ்வளவு தெரியுமா.?
அதுபோல கேஸ் சில்க் சமைக்கும் போது எப்போதும் திறந்திருக்கும் பாத்திரத்திற்கு பதிலாக மூடி இருக்கும் பாத்திரத்தை பயன்படுத்துங்கள். நீங்கள் குக்கரை பயன்படுத்தலாம். இதன் மூலம் அரிசி, காய்கறிகள் விரைவில் வெந்துவிடும் கேஸ் வீணாகாது. சமையலும் சீக்கிரம் முடிந்துவிடும்.
இதையும் படிங்க: பெண்களுக்கு எல்பிஜி கேஸ் சிலிண்டர் இலவசம்.. மத்திய அரசு திட்டம் உங்களுக்கு தெரியுமா? எப்படி பெறுவது?
கேஸ் செலவாகாமல் இருக்க முதலில் கேஸ் பர்னரை சுத்தமாக வையுங்கள். மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது பர்னரை சர்வீஸ் செய்யுங்கள். பர்னரின் நிறத்தை வைத்து அது சுத்தமாக இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். கேஸ் ஸ்டவ் நெருப்பின் நிறம் சிவப்பு மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக இருந்தால் பர்னரில் சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம். இப்படி செய்தால் கேஸ் வீணாக செலவாகாது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D