Asianet News TamilAsianet News Tamil

அந்தரங்கம்! தாம்பத்யம்! தகாத உறவு! ஆண்களுக்கு இருக்கும் அஜால் குஜால் ஆசைகள்!

பெண்களை விட ஆண்களுக்கு அதிக தாம்பத்திய ஆசைகள்,  காணப்படுகிறது. செக்ஸ் ரீதியான விஷயத்தில் ஆண்களிடம் சில ஆசைகள் தென்படுகின்றன. இதை தங்கள் துணையுடன் சேர்ந்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்கள் விரும்புவதுண்டு. 

Secrets About play boy and men
Author
Chennai, First Published Oct 6, 2018, 12:26 PM IST

பெண்களை விட ஆண்களுக்கு அதிக தாம்பத்திய ஆசைகள்,  காணப்படுகிறது. செக்ஸ் ரீதியான விஷயத்தில் ஆண்களிடம் சில ஆசைகள் தென்படுகின்றன. இதை தங்கள் துணையுடன் சேர்ந்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்கள் விரும்புவதுண்டு. 

தன் துணை தானாக முன் வந்து தாம்பத்திய உறவில் இணைய ஆர்வம் காட்ட வேண்டும் என்ற ஆசை ஆண்களுக்கு உண்டு.
பெண்களின் ஆர்வம் வழியாக துவங்கும் தாம்பத்தியம் சிறந்ததாக அமையும் என்ற கருத்து காணப்படுகிறது. இத்தகைய இணைப்பில் வேண்டுவது எல்லாம் கிடைக்கும் என்று ஆண்கள் கூறுகிறார்கள். 

கேட்டறிதல்... 

ஆண், பெண்ணுக்கும் தனித்தனி விருப்பு, வெறுப்பு இருக்கும்.  தாம்பத்திய உறவில்  கட்டாயப்படுத்துதல் கூடாது. தங்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதை துணையிடம் இருந்தே கேட்டறிந்து கொள்வது ஆண்கள் விரும்பும் செயல். இதனால், தாம்பத்திய உறவில் பிரச்சனையும், மனக் கசப்பும் நேரிடாது. அதே போல தங்கள் விருப்பதை கூறி, அதை அவர்கள் மூலம் நிறைவேற்றி கொள்ள வேண்டும் என்ற ஆசையும் கொண்டிருக்கிறார்கள். 

கண்களை மூடாதே... 

ஆண்கள் உறவுக் கொள்ளும் போது துணை கண்களை மூடிக் கொள்வதை விரும்புவதில்லை. கண்களில் தான் உணர்வு வெளிப்படும். அதன் மூலம் உறவில் சிறந்து ஈடுபட, உணர்வை ஒருவரிடம் ஒருவர் பெற இயலும். கண்களை மூடிக் கொள்வதால் தங்களது செயல்பாடு பிடிக்கிறதா? பிடிக்காமல் போகிறதா? தாங்கள் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது என்பதை அறிந்துக் கொள்ள முடியாமல் போகிறது என்கிறார்கள்

தாம்பத்தியம் என்பது எடுத்தோம் கவிழ்த்தோம் என்பது கிடையாது. அதுவாக நடக்க வேண்டும். அதற்கான சூழல் உண்டாக வேண்டும். தாம்பத்தியத்தில் ஒருவரது விருப்பம் மட்டும் போதுமானது அல்ல என்றும் கருதுகிறார்கள். 

உறவில் இணையும் போது தனித்து ஈடுபடுவதை காட்டிலும்... ஒருவருக்கு ஒருவர் ரொமான்சாக உதவ வேண்டும் என்பது ஆண்களின் ஆசையாக இருக்கிறது. இது ஆடைகளை களைவதில் இருந்து, மனதார இணைவது வரை இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். 

ஆதிக்கம்! 

துணை ஆர்வம் காட்ட வேண்டும் என்றாலும் கூட, ஆதிக்கம் தங்களுடையதாக இருக்க வேண்டும் கருதுகிறார்கள். தங்கள் ஆதிக்கம் இருக்கும் போது தான் உறவில் சிறந்து ஈடுபட முடிகிறது.

பேசி தீர்க்க வேண்டும்...

தாம்பத்தியத்தில் எப்படி ஈடுபட வேண்டும் என்ற ஆசை பெண்களை காட்டிலும் ஆண்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. தங்கள் துணையிடமும் பலவற்றை பகிர்ந்து கொள்கிறார்கள் . உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு எப்படி ஈடுபடலாம், என்ன முயற்சி செய்யலாம் என்பதை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios