Asianet News TamilAsianet News Tamil

தங்கம் வென்ற தமிழச்சிக்கு முக ஸ்டாலின் வாழ்த்து..!

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவிற்கு வாழ்த்து தெரிவித்தார் திமுக  தலைவர் முக ஸ்டாலின்

mk stalin widhes komathi marimuthu for gold medalist
Author
Chennai, First Published Apr 23, 2019, 7:24 PM IST

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவிற்கு வாழ்த்து தெரிவித்தார் திமுக  தலைவர் முக ஸ்டாலின்

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்தியாவிற்கு பெருமை  சேர்த்த கோமதி  மாரிமுத்துவை பாராட்டி திமுக  தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்துக்களை  தெரிவித்து  உள்ளார். அதில், 

"கத்தார் நாட்டில் உள்ள தோகாவில் நடைபெறும் 23 ஆவது ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்திற்கான பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் பெற்று தந்திருப்பதற்கு பாராட்டுகிறேன்

தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் உலக அரங்கில் பெருமை தேடித் தந்திருக்கும் அவர் சர்வதேசப் போட்டிகளில் மேலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்திட வேண்டும் என்று இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்" என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios