மேஷ ராசி நேயர்களே...!

உங்களது கடின உழைப்பால்முக்கிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனப்போராட்டங்கள் அதிகமாக இருக்கும். உங்களுடைய பேச்சால் பல வேலைகளை திறமையாக முடித்துக்காட்டுவீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

பண வரவு திருப்தியாக இருக்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உண்டு.

மிதுன ராசி நேயர்களே...!

அதிக செலவு ஏற்படும் நாளிது. திடீர் பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பண பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்க முயற்சி மேற்கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் தங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்.

கடக ராசி நேயர்களே..!

வீடு வாகனம் வாங்க கூடிய யோகம் உங்களுக்கு பிறக்கும். பழைய நகைகளை விற்று புது நகைகளை வாங்குவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள்.

சிம்மராசி நேயர்களே..!

ஆடம்பர செலவுகளை குறைக்க முற்படுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருவாய் அதிகரிக்கும். பல மின் சாதனங்களை மாற்றி புதிதாக வாங்குவீர்கள்.

கன்னி ராசி நேயர்களே..!

வெளிவட்டாரத்தில் உங்களுடைய மதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும். மரியாதை கூடும் பெரிய பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு  உள்ளது. உங்களுடைய தாயாரின் உடல் நிலையில் அக்கறை காட்டுவது நல்லது.