தினமும் 20 நிமிடங்கள் திறந்த வெளியில் வாக்கிங்.. உங்க உடலில் அற்புதம் நிகழும்!
Walking Outside and Mental Health : நீங்கள் தினமும் வெளியில் நடைபயிற்சி செய்வதால் மன ஆரோக்கியம் எவ்வாறு மேம்படும் என்பதைப் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் தினமும் காலையில் வாக்கிங் செல்வதால் கிடைக்கும் பல ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுவும் குறிப்பாக நீங்கள் தினமும் 20 நிமிடங்களாவது வெளியில் வாக்கிங் செல்வதால் உங்களது மனம் ஆரோக்கியம் மேம்படும் தெரியுமா?
ஆம், இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தத்தால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நீண்ட காலமாக மனநல பிரச்சனைகள் அல்லது மன அழுத்தத்தால் அவதிப்படுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே இந்தப் பிரச்சனையை குறைக்க அதற்குரிய பயிற்சிகளை செய்ய வேண்டும். இதற்காக நீங்கள் தினமும் வெளியில் வாக்கிங் போகலாம். ஏனெனில், வெளிபுற நடைபயிற்சியால் இதய ஆரோக்கியம் மேம்படும், எடை மேலாண்மைக்கு உதவும், மன அழுத்தத்தை குறைக்கும். சொல்லப்போனால் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
இதையும் படிங்க: நீங்க வாக்கிங் போறப்ப இந்த '5' விஷயங்களை பண்ணாட்டி நடக்குறதே வேஸ்ட்!!
வெளிபுற நடைபயிற்சி:
வெளிப்புற நடைபயிற்சி ஒரு பயனுள்ள உடற்பயிற்சியாகும். காரணம் வெளியில் நடப்பதால் புதிய காற்று, சூரிய ஒளி மற்றும் இயற்கை காட்சிகள் ஆகியவற்றை பார்க்கும் போது மிகவும் சுவாரசியமாகவும், ஊக்கமாகவும் இருக்கும். தினமும் வெளியில் வாக்கிங் செல்வதால் தசைகள் மேம்படும், சகிப்புத்தன்மை மேம்படும், இதய நோய் போன்ற நோய்களின் அபாயம் குறையும். எனவே மன ஆரோக்கியத்தை மேம்படுத்த வெளிப்புற நடை பயிற்சி எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: தினமும் 5 ஆயிரம் காலடிகள் நடந்தால்.. எல்லாருக்கும் வர்ற இந்த '1' நோய் உங்களுக்கு வராது..!
1. மன அழுத்தம் குறையும்:
இயற்கை சூழலில் வெளிப்புற நடைபயிற்சி செய்வது மன அழுத்தத்துடன் தொடர்புடைய ஹார்மோன் அளவை குறைக்கும். புதிய காற்று மற்றும் இயற்கையின் விளைவால் உங்களது மனம் அமைதி அடைகிறது. இதனால் மன அழுத்தமும் குறைய ஆரம்பிக்கும்.
2. மனநிலையை அதிகரிக்கும்:
வெளியில் நடைபயிற்சி செய்வது உடலில் மனநிலை மேம்படுத்தும் எண்டோர்பின்களை வெளியிட உதவும். சூரிய ஒளி மற்றும் உடலின் இயக்கத்தால் மனசோர்வின் அறிகுறிகள் குறையும். இதனால் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்த உதவும்.
3. பதற்றத்தை குறைக்கிறது:
இயற்கையுடன் இணைந்து வாக்கிங் சென்றால் கவலையின் அளவு குறை ஆரம்பிக்கும். ஏனெனில் வெளிப்புற நடைபயிற்சி ஒரு தியான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் ஒரு இனிமையான சூழலை உங்களுக்கு வழங்குகிறது இதனால் உங்களது கவலையான எண்ணங்கள் அனைத்தும் குறைய ஆரம்பிக்கும்.
4. படைப்பாற்றல் அதிகரிக்கும்:
வெளியில் வாக்கிங் செல்வது உங்களை சுதந்திரமாக சிந்திக்கவும், மன தடைகள் அனைத்தையும் உடைக்க பெரிதும் உதவுகிறது. இயற்கையுடன் உங்களது மனம் இணைந்திருப்பதால் உங்களது படைப்பாற்றல் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இதனால் புதிய யோசனைகள், பல சிக்கல்களை தீர்க்கும் திறன்கள் உருவாகும்.
5. நினைவாற்றலை ஊக்குவிக்கும்:
இயற்கையுடன் இணைந்து நடப்பது உங்களது நினைவாற்றலை ஊக்குவிக்க உதவுகிறது. அதாவது நீங்கள் வெளிப்புற நடைபயிற்சி ஈடுபடும் போது பிற உணர்வுகள் மற்றும் கவலை எண்ணங்கள் குறையும். உணர்ச்சி கட்டுப்பாட்டு மேம்படும் மற்றும் அமைதி உணர்வு உங்களுக்குள் ஏற்படும்.
6. தூக்கத்தின் தரம் மேம்படும்:
வெளிப்புற நடைபயிற்சி அதுவும் குறிப்பாக காலையில் செய்வது உங்களது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனால் நீங்கள் இரவில் சீக்கிரமாகவே தூங்குவீர்கள் மற்றும் உங்களது மன ஆரோக்கியமும் பராமரிக்கப்படும்.