நீங்க வாக்கிங் போறப்ப இந்த '5' விஷயங்களை பண்ணாட்டி  நடக்குறதே வேஸ்ட்!! 

Walking For Wight Loss : உடல் எடையை குறைப்பதற்காக நடைபயிற்சி செய்பவர்கள் கொழுப்பை விரைவில் குறைக்க பின்பற்ற வேண்டிய 5 விஷயங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

5 tips you should follow to reduce weight by walking in tamil mks

நடைபயிற்சி மிதமான உடற்பயிற்சியாகும். இதனை நாள்தோறும் செய்பவர்களுக்கு இதய ஆரோக்கியம் மேம்படும். மன ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். இது தவிர உடல் எடையை குறைப்பவர்கள் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் காலடிகள் நடப்பது அபரிமிதமான பலன்களை தரும். நாம் நடப்பது எடையை குறைக்க உதவும். ஆனால் நடைபயிற்சி மட்டுமே எடையை குறைக்காது. உணவு பழக்கங்களையும் சரியான முறையில் பின்பற்ற வேண்டியது அவசியம்.  நடைபயிற்சி மேற்கொள்ளும் போது செய்யக்கூடாத தவறுகள் குறித்தும், எதை செய்ய வேண்டும் என்பது குறித்தும் இங்கு காணலாம். 

எடையை குறைக்க வாக்கிங்: 

நீங்கள் ஒரு நாளுக்கு 15 ஆயிரம் காலடிகள் நடக்கும்போது உடல் எடையை குறைப்பதில் கணிசமான பலன்களை பெற முடியும். சிலர் நாள்தோறும் நடப்பார்கள். ஆனால் அவர்களுடைய காலடிகள் 15 ஆயிரத்தை தொடாது. குறைந்த தூரம் நடப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுமே தவிர உங்களுடைய கலோரியை எரிக்க உதவாது. இதனால் கொழுப்பு கரையாது. நீங்கள் வழக்கமாக நடப்பதை விட வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் நடக்கும் போது இதயத்துடிப்பு மாறுபடுகிறது. தினமும் இவ்வாறு நடக்க முடியாவிட்டால் கூட வாரத்தில் ஒரு தடவையாவது வேகமாக நடைபயிற்சி செய்ய வேண்டும். 

இதையும் படிங்க:  ஈஸியா எடையை குறைக்க சாப்பிட்டதும் 'எத்தனை' நிமிஷம் நடக்கனும் தெரியுமா? 

வெறும் நடைபயிற்சியா? 

வெறுமனே தினமும் நடைபயிற்சி மட்டும் செய்யாமல் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் படிக்கட்டுகளில் ஏறி, இறங்கலாம். அவ்வப்போது மலைப்பாதைகளில் நடப்பது எடையை குறைக்க உதவியாக இருக்கும். நடப்பது ஒரு மிதமான பயிற்சியாக இருந்தாலும் வாரத்தில் இரண்டு நாட்களாக வது வேகமாக நடக்க முயற்சி செய்ய வேண்டும் உங்களுடைய இதயம் வேகமாக துடிக்கும் போது நீங்கள் அதிகமான கலோரிகளை எரிக்கும் வாய்ப்பு உருவாகிறது நீங்கள் அதிகமாக நடக்கும் போது அதிக கொழுப்பை எரிக்க முடியும். எப்போதும் நீண்ட தொலைவிற்கு நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது. ஒரு வாரத்தில் மூன்று தடவை வழக்கத்திற்கு மாறாக வேகமாக நடப்பது எடையை குறைக்க உதவும். 

இதையும் படிங்க: வெறும் வயிற்றில் வாக்கிங் போறீங்களா? அப்ப இந்த '5' விஷயங்கள் ரொம்ப முக்கியம்!! 
 
மலைப்பாதை: 

உடலுக்கு ஒரே மாதிரியான பயிற்சிகளை கொடுப்பதால் அவை அதற்கு பழக்கப்பட்டு விடும். இதனால் எடை குறைப்பதில் நல்ல பலன்களை பெற முடியாது.  வெவ்வேறு வகையான பயிற்சிகளை மேற்கொள்ளும் போது உடலில் இயக்கம் சிறப்பாக இருக்கும். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மலைப்பாதைகளில் நடைபயிற்சி செய்ய முயற்சி செய்யலாம். டிரெட்மில்லில் சாய்ந்த வாக்கில் உள்ள மேல்நோக்கிய பயன்முறையில் வாக்கிங் செல்லலாம். இதனை வாரத்தில் 3 முறை பின்பற்றலாம். மலைப்பாதைகளில் வாக்கிங் செல்வதால் உங்களுடைய தசைகள் வலுவாகி, வளர்ச்சிதை மாற்றத்தையும் மேம்படுத்த முடியும். உங்களால் மலைப்பாதைகளில் நடக்க முடியாத பட்சத்தில் படிக்கட்டுகளில் நடப்பதை பழக்கப்படுத்தலாம். இந்த பயிற்சிகளால் உடலில் உள்ள கலோரிகள் அதிகமாக எரிக்கப்பட வாய்ப்புள்ளது.

எவ்வளவு நேரம் நடக்கலாம்?

ஒரு நாளில் ஒரே முறையில் 60 நிமிடங்கள் (1மணி நேரம்) நடப்பதை விடவும் அதை 3 முறையாக பிரித்து 20 நிமிடங்களாக மூன்று தடவை நடக்கலாம். உங்களுடைய எடையை குறைக்க இந்த முறை மிகவும் உதவியாக இருக்கும். ஒரு நாளில் மூன்று தடவை 20 நிமிடங்கள் நடப்பது உடலை நன்றாக இயங்கச் செய்யும். சாப்பிட்ட பின்னர் பத்திலிருந்து 15 நிமிடங்கள் நீங்கள் நடைபயிற்சி மேற்கொண்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.  உங்களுடைய செரிமானம் மேம்பட்டு உடல் எடையை குறைப்பதில் உதவும்.  உங்களுக்கு இனிப்புகள் அதிகம் சாப்பிடும் ஆர்வம் இருந்தால், நடைபயிற்சி மேற்கொள்வதால் அந்த ஆர்வத்தை குறைக்க முடியும். 

கலோரிகள் & காலடிகள்: 

நீங்கள் எவ்வளவு கலோரிகள் உட்கொள்கிறீர்கள்? எத்தனை காலடிகள் நடக்கிறீர்கள்? என்பது குறித்து கவனமாக இருப்பது எடை குறைப்பு பயணத்தில் முக்கியமான ஒரு பகுதியாகும். இதனை கணக்கிட கலோரி மற்றும் காலடி கணக்கிடும் செயலி அல்லது கேட்ஜெட்ஸை பயன்படுத்தலாம். நீங்கள் சாப்பிட வேண்டிய உணவின் கலோரிகள் மற்றும் நடக்க வேண்டிய காலடிகளுக்கு குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்து அதை எட்டுவதன் மூலமாக எடையை குறைக்கலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios