MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வெறும் வயிற்றில் வாக்கிங் போறீங்களா? அப்ப இந்த '5' விஷயங்கள் ரொம்ப முக்கியம்!! 

வெறும் வயிற்றில் வாக்கிங் போறீங்களா? அப்ப இந்த '5' விஷயங்கள் ரொம்ப முக்கியம்!! 

Walking On An Empty Stomach : வெறும் வயிற்றில் நடைபயிற்சி செல்பவர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அவை குறித்து இந்த பதிவில் காணலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Dec 18 2024, 08:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Walking on An Empty Stomach in Tamil

Walking on An Empty Stomach in Tamil

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் நடைபயிற்சி மேற்கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. ஒரு நாளுக்கு 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது நல்லது. அதிலும் வெறும் வயிற்றில் செய்தால் கோடி நன்மைகள் கிடைக்கும். காலையில் எழுந்ததும் சிலர் ஏதேனும் பழங்கள் அல்லது கூழ் போன்றவை சாப்பிட்டு நடக்க செல்வார்கள். சிலர் காபி அல்லது டீயை அருந்துவார்கள். ஆனால் அப்படி செய்வதை விட வெறும் வயிற்றில் நடைபயிற்சி செல்பவர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அவை குறித்து இந்த பதிவில் காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Benefits of Walking in Tamil

Benefits of Walking in Tamil

காலையில் சாப்பிடுவதற்கு முன்பாக சுறுசுறுப்பாக 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது உடலுக்கு நீங்கள் நினைத்து பார்க்காத அளவுக்கு நேர்மறையான நன்மைகளை தரும். காலையில் சாப்பிடாமல் நடக்க செல்வது உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. அதாவது வெறும் வயிற்றில் நீங்கள் சுறுசுறுப்பாக நடக்கும் போது அதற்கான ஆற்றலை உடலில் உள்ள கொழுப்பிலிருந்து பெறுகிறீர்கள். இதனால் உடலில் சேகரமாகும் கொழுப்பு சீக்கிரம் கரைந்து ஆரோக்கியமாம மாறுவீர்கள்.  

இதையும் படிங்க:  வெறும் 15 நிமிடம் வாக்கிங்.. எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

35
Walking on an empty stomach for weight loss in tamil

Walking on an empty stomach for weight loss in tamil

வளர்சிதை மாற்றம்: 

வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்தால்  வளர்சிதை மாற்றம் மேம்படும். இதனால் நாள் முழுக்க நன்றாக செயல்பட தேவையான ஊட்டச்சத்துக்களை உணவிலிருந்து எடுத்து உடலுக்கு தரும் செயல்முறை மேம்படுகிறது. வளர்சிதை மாற்றம் அதிகரிப்பதால் உடல்  எடையை  கட்டுக்குள் வைக்கமுடியும். 

ரத்த சர்க்கரை அளவு சீராகும்:  

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி பக்க விளைவுகளை அனுபவிப்பவர்கள், வெறும் வயிற்றில் நடைபயிற்சி மேற்கொள்வது நல்ல பயனளிக்கும். சாப்பிடும் முன் காலையில் நடைபயிற்சி செய்தால் இன்சுலின் உணர்திறன் மேம்படும்.  இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். வெறும் வயிற்றில் காலை நடைபயிற்சி செய்வதால் இன்சுலின் எதிர்ப்பு கூடும்.  வகை 2 நீரிழிவு நோய் ஆபத்து குறையும். 

45
How to walk on an empty stomach in tamil

How to walk on an empty stomach in tamil

மன நலம் மேம்படும்! 
 
காலையில் நடைபயிற்சி செய்வது அந்த நாளின் நல்ல தொடக்கமாகும். இது மனநலனை மேம்படுத்தி நாள் முழுக்க உற்சாகமாக இருக்க உதவும். உடற்பயிற்சி செய்யும் நேரங்களில் மனநிலையை மேம்படுத்தும் எண்டோர்பின்களின் அதிகமாக சுரக்கும். இதனால் மனச்சோர்வு, கவலை குறையும். 

இதய ஆரோக்கியம்: 

தினமும் வெறும் வயிற்றில் நடந்தால் இதயம் ஆரோக்கியமடையும். ஏனென்றால் நடைபயிற்சி இரத்த அழுத்தத்தை குறைத்து  இதய ஆரோக்கியத்தை நன்றாக வைத்துகொள்ள உதவும். தினமும் நடந்தால் இதய நோய், பக்கவாதம் போன்ற நோய் உங்களை அண்டாது. 

55
Benefits of walking on an empty stomach in tamil

Benefits of walking on an empty stomach in tamil

செரிமானம் மேம்படும்! 

நடைபயிற்சி மிதமான உடற்பயிற்சி. இதனால் செரிமானம் தூண்டப்படுகிறது. நடைபயிற்சி செய்யும்போது உடல் இயக்கத்தின் போது அடிவயிற்றில் இருக்கும் தசைகள் சுருக்கம் அடைகிறது. இதனால் செரிமான பாதை மூலம் உணவை நகர்த்தப்பட உதவியாக உள்ளது. செரிமான கோளாறு அல்லது வயிறு வீக்கத்தால் அவதிப்படுவர்கள் காலையில் நடக்கலாம். நல்ல தீர்வு கிடைக்கும்.

இதையும் படிங்க: காலை vs மாலை: எப்ப வாக்கிங் போறது எடையை குறைக்க உதவும்?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
நடைப்பயிற்சியின் நன்மைகள்
நடைப்பயிற்சி குறிப்புகள்
வாழ்க்கை முறை
ஆரோக்கிய குறிப்புகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
காலையில் வெறும் வயிற்றில் கொய்யாப் பழம் சாப்பிடலாமா? யார் சாப்பிடலாம்? யார் தவிர்க்க வேண்டும்? நிபுணர் தரும் எச்சரிக்கை!
Recommended image2
தினமும் காலையில் இட்லி வித் ஃபில்டர் காபியா? நிபுணர் சொல்லும் ஷாக்கிங் உண்மை!
Recommended image3
Water Tank Leakage: தண்ணீர் தொட்டியில் விரிசலா? புதிய தொட்டி வாங்கும் முன் இதைச் செய்யுங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved