நீங்கள் சமையலுக்கு புதிதானவர் என்றால், விரைவிலேயே சமையலில் கைதேந்தவராக மாற சில எளிய சமையல் குறிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Kitchen Tips and Tricks for Beginners : பொதுவாக சமையலை புதுசாக பழகுபவர்களுக்கு அது ஒரு சவாலானதாகத் தோன்றும். காய்கறிகளை நறுக்குவது முதல் உணவில் மசாலா சேர்ப்பது வரை என எல்லாமே அவர்களுக்கு குழப்பமாக இருக்கும். ஆனால் அது குறித்து இனி நீங்கள் பயப்பட தேவையில்லை. ஆம், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய குறிப்புகள் மற்றும் தந்திரங்களை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் விரைவிலேயே சமையலில் கைதேர்ந்தவராக மாறிவிடலாம் தெரியுமா? அந்த எளிய சமையல் குறிப்புகள் சிலவற்றை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சமையலை புதிதாக பழகுபவர்களுக்கான சிம்பிள் டிப்ஸ்:

அடிப்படையான பொருட்களை ஸ்டாக்காக வைத்துக் கொள் :

சமையலுக்கு அடிப்படை தேவையான பூண்டு, வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், எண்ணெய், ஊப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், அரிசி மற்றும் பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் எப்போதுமே வீட்டில் ஸ்டாக் ஆக வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இவை கடைசி நிமிடம் பதற்றத்தை தவிர்க்கும்.

சமையலுக்கு முன் பொருட்களை தயார் செய்:

இது சமையலுக்கு முக்கியமான மந்திரம். நீங்கள் சமையலை தொடங்குவதற்கு முன்பு என்ன உணவு சமைக்க போகிறீர்களோ அதற்கான காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள், மசாலா பொருட்கள் அனைத்தையும் அளந்து தனித்தனியாக கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் சமைக்கும் போது பதட்டம் இருக்காது நல்ல முறையில் சமைத்து முடிப்பீர்கள்.

கத்திகளை கூர்மையாக வை :

நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் கத்தி கூர்மையாக இருப்பது மிகவும் அவசியம். கத்திகள் கூர்மையாக இருந்தால்தான் காய்கறிகளை மிக எளிதாக வெட்ட முடியும். மழுங்கிய கத்தி ஆபத்தை தான் விளைவிக்கும். ஏனெனில் மழுங்கிய கத்தி பயன்படுத்தும் போது அது தவறுதலாக வழுக்கி கையில் படும் வாய்ப்பு அதிகம் உள்ளன. எனவே அவ்வப்போது சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியை தீட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

சமையலுக்கு சரியான வெப்பநிலை அவசியம் :

சமையல் நல்ல முறையில் வருவதற்கு வெப்பநிலை அவசியம். அதாவது நீங்கள் வெங்காயத்தை வதக்கும்போது மிதமான தீயில் வைத்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதுவே காய்கறிகளை வதக்கும்போது அல்லது பொறிக்கும் போது தீயை அதிகமாக வைக்க வேண்டும். இது தவிர எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு தான் தாளிக்க வேண்டும். இப்படி சமையலில் சரியான புரிதல் இருந்தால் உணவின் சுவை அருமையாக இருக்கும்.

சுவைத்துப்பார் :

சமைக்கும்போது உணவின் சுவை சரிப்பார்க்கவும். அதாவது உணவில் உப்பு அல்லது காரம் சரியாக இருக்கிறதா அல்லது குறைவாக இருக்கிறதா, ஏதேனும் மசாலா சேர்க்க வேண்டுமா? என்று பார்ப்பது ரொம்பவே முக்கியம். ஆனால் கடைசி நிமிடத்தில் இவற்றை சரி செய்வத விட படிப்படியாக சரி செய்துவிடுங்கள். அதுதான் நல்லது.

எளிதான ரெசிபியில் தொடங்கு :

முதன் முதலில் சமைக்க போகிறீர்கள் என்றால் சிக்கலான ரெசிபிகளை ஒருபோதும் முயற்சி செய்து பார்க்காதீர்கள். மிக எளிதான ரெசிபியில் இருந்து தொடங்குங்கள். உதாரணமாக ரசம், சாதம், பொரியல், எளிதான குழம்பு போன்ற எளிமையான ரெசிபி வகைகளில் தொடங்கலாம். இதில் நீங்கள் நன்றாக சிறந்து விளங்கினால் அடுத்த நிலைக்கு மெதுவாக செல்லலாம்.

சுத்தம் முக்கியம் ;

சமையல் எல்லாம் முடித்த பிறகு சமையலறையை உடனே சுத்தம் செய்வது மிகவும் அவசியம். அதாவது, சமைத்த பாத்திரங்களை உடனே கழுவி விடுங்கள், அடுப்பை துடைத்து விடுங்கள். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் அடுத்ததாக சமைக்கும்போது வேலை மிக எளிதாக இருக்கும். அதுமட்டுமின்றி சமையலறை சுத்தமாக இருந்தால் சமைக்கும் ஆர்வம் அதிகரிக்கும்.

குறிப்பு : மேலே சொன்ன குறிப்புகளை பின்பற்றி நம்பிக்கையுடன் சமையலை தொடங்குங்கள். மேலும் ஒவ்வொரு முறையும் சமைக்கும்போது புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.