- Home
- Gallery
- Cooking Tips : வெண்டைக்காயை பிசுபிசுப்பு இல்லாமல் மொறு மொறுப்பாக சமைக்க சூப்பரான டிப்ஸ் இதோ..!
Cooking Tips : வெண்டைக்காயை பிசுபிசுப்பு இல்லாமல் மொறு மொறுப்பாக சமைக்க சூப்பரான டிப்ஸ் இதோ..!
வெண்டைக்காயில் ஒட்டும் தன்மையை நீக்க சில குறிப்புகள் இங்கே..

வெண்டைக்காய் ஆரோக்கியமாக காய்கறிகளில் ஒன்றாகும். வெண்டைக்காய் சுவையானது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் பல வகையான நன்மைகளை வாரி வழங்குகின்றது.
வெண்டைக்காயை சிலர் சாம்பாரில் போட்டு சமைப்பார்கள், சிலர் பொரியல் செய்வார்கள். இருந்தாலும் இந்த காயை வெட்டும்போது பிசுபிசுப்பாக ஒட்டும், சாப்பிடும் போது கொழ கொழவென்று இருக்கும். இதனால் பலர் வெண்டைக்காயை சாப்பிடுவதை விரும்பவில்லை. எனவே, வெண்டைக்காய் பிசுபிசுவென ஒட்டும் தன்மை இல்லாமல் சமைக்க சில டிப்ஸ் இங்கே..
நல்ல வெண்டைக்காயை வாங்குங்கள்: நீங்கள் கடையில் இருந்து வாங்கும் வெண்டைக்காயை நல்ல முறையில் பார்த்து வாங்குங்கள். எப்போது வாங்கினாலும் லேசாக அளித்து பார்த்து வெண்டைக்காய் மென்மையாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள்.
சுத்தம் செய்து காய வைக்கவும்: நீங்கள் வெண்டைக்காயை சமைக்கும்போது கழுவுவது மிகவும் அவசியம். ஆனால், உடனே சமைக்க வேண்டாம். அப்படி சமைத்தால் கொழ கொழப்பு தன்மை இருக்கும். எனவே, அவற்றை நன்கு தூண்டில் துடைத்து உலர வைக்க வேண்டும்.
தயிர்: வெண்டைக்காய் வதக்கும் போது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து வதக்குங்கள். இதனால் வெண்டைக்காயில் கொழ கொழப்பு வராது. மேலும், இது கூடுதல் சுவையையும் அளிக்கும். உங்களிடம் தயிர் இல்லை என்றால், சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
இதையும் படிங்க: Ladies Finger : வெண்டைக்காயை யார் சாப்பிடக்கூடாது தெரியுமா..? மீறினால் என்ன..?
கடலை மாவு: வெண்டைக்காய் சமைக்கும் போது அதை சிறிதளவு கடலை மாவு சேர்த்து சமைத்தால் பிசுபிசுவென ஒட்டும் தன்மை இல்லாமல் இருக்கும்.
இதையும் படிங்க: Lady Finger Face Pack :"வெண்டைக்காய்" சாப்பிடுவதற்கு மட்டுமல்ல அழகின் பொக்கிஷத்திற்கும் கூட...எப்படி தெரியுமா?
பாத்திரத்தை மூட வேண்டாம்: வெண்டைக்காயை திறந்த பாத்திரத்தில் வைத்து சமையுங்கள். அதை ஒருபோதும் அதை மூட வேண்டாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D