உங்களது நேரத்தை மிச்சப்படுத்த உதவும் சில சமையல் குறிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சமையல் என்பது ஒருவிதமான தனி கலை. சமைப்பது முழு மனதுடன் செய்தால் சாப்பிடுபவர் வயிறு நிரம்பும், ஆரோக்கியமும் உண்டாகும் என்ற கருத்து குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுமட்டுமின்றி நாம் எந்தவொரு விஷயத்தையும் மகிழ்ச்சியுடன் செய்யும்போது, அதை சிரமமாக உணர மாட்டோம். இஷ்டப்பட்டு செய்யும் ஒவ்வொரு விஷயமும் கஷ்டமாக இருக்காது. அது போல தான் சமையல். நீங்கள் சமையலை விரும்பி செய்கிறீர்கள் என்றால் உங்களது நேரத்தை மிச்சப்படுத்த உதவும் சில சமையல் ஐடியாக்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சமையல் குறிப்புகள்:
1. நீங்கள் நாளை என்ன உணவுகளை செய்யப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து அதற்கான காய்கறிகள் மற்றும் பிற பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக சமையலுக்கு தேவைப்படும் இஞ்சி பூண்டு விழுது, தேங்காய் துருவல் போன்றவற்றை தயார் செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள்.
2. அதுபோல சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரத்தை முன்கூட்டியே தேர்வு செய்தால் நேரம் வீணாகாது.
3. உங்களிடம் எலக்ட்ரிக் குக்கர், எலக்ட்ரிக் அடுப்பு போன்றதே இருந்தால் அவற்றை உபயோகித்து சமையலே விரைவாக முடித்து விடலாம்.
4. காய்கறிகளை நறுக்குவதற்கான கத்திகளை அதற்குரிய ஸ்டேண்டில் வைத்து எடுக்கும் பழக்கத்தை பழகிக்கொள்ளுங்கள். அதுபோல ஒரே கத்தியில் காய்கறிகள் மற்றும் இறைச்சி நறுக்குவதை தவிர்க்க வேண்டும். இரண்டிற்கும் வெவ்வேறு கத்திகளை உபயோகித்தால் கத்திகள் நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும்.
5. சமையலின் நேரத்தை குறைக்க ஒற்றைப் பாத்திரம் கலவையில் சாதம் சூப் ரசம் ஆகியவற்றை செய்யலாம். இது சமையல் நேரத்தை மிச்சப்படுத்த மிக எளிதான வழி.
6. கடைசி நிமிடத்தில் சமையலை செய்வதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக தேவையற்ற சமையல் பரிசோதனையால் உணவு தான் வீணாகும். வேண்டுமானால் ஓய்வு நாட்களில் அந்த வாரத்திற்கான உணவை திட்டமிடுங்கள்.
7. சமையலுக்கு தேவையான எல்லா பொருட்களும் இருக்கிறதா? என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லை என்றால் முன்கூட்டியே வாங்கி வையுங்கள். இதனால் டென்ஷன் இல்லாமல் நீங்கள் ரிலாக்ஸாக சமைக்கலாம்.
8. சமையல் செய்யும்போது நேரத்தை மிச்சப்படுத்தவும் மன அழுத்தம் ஏற்படுவது இதை தவிர்க்கவும், சமையலுக்கு பயன்படுத்தப்படும் மாசலா பொருட்கள் பாத்திரங்களை எடுக்க ஏதுவாக இடங்களில் வையுங்கள்.
9. சமையல் ருசியாகவும் விரைவாகவும் முடிக்க சமையல் கலை நிபுணர் சொல்லும் பயிற்சிகளை கற்றுக்கொண்டு சமையலை திறம்பட செய்யுங்கள்.
10. நீங்கள் சமையலுக்குரிய முன்னேற்பாடுகளை முன்கூட்டியே செய்து வைத்தால் டென்ஷன் இல்லாமல் மகிழ்ச்சியாக சமைக்கலாம்.
