Asianet News TamilAsianet News Tamil

IRCTC Tour Package : தமிழகத்தின் மலையழகை ரசிக்கணுமா? மீடியம் பட்ஜெட்டில் ஒரு பேக்கேஜ் - விவரம் இதோ!

IRCTC Tour Package : சென்னையில் துவங்கி, தமிழகத்தின் அழகிய பல பகுதிகளை குறைந்த செலவில் சுற்றிப்பார்க்க IRCTC புதிய பேக்கேஜ் அறிமுகம் செய்துள்ளது.

IRCTC Tamil Nadu Yatra tour package in monsoon full details ans
Author
First Published Sep 6, 2024, 10:58 PM IST | Last Updated Sep 6, 2024, 10:58 PM IST

கடந்த பல ஆண்டுகளாகவே உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள அழகிய இடங்களை சுற்றி பார்க்க IRCTC குறைந்த விலையில் நல்ல பல டூர் பேக்கேஜ்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களையும், மலைப் பாங்கான பகுதிகளையும் சுற்றிப் பார்க்க "தமிழ்நாடு யாத்திரை" என்கின்ற தலைப்பில் இந்த பருவ மழை காலத்தில் புதிய டூர் பேக்கேஜ் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. 

5 இரவுகள் மற்றும் 6 பகல்கள் கொண்ட இந்த பயணத்தில், கோவை, கொடைக்கானல் மற்றும் மதுரை உள்ளிட்ட ஊர்களில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள் சுற்றிக்காட்டப்படும். ஹைதராபாத்தில் இருந்து இந்த ரயில் பயணம் தொடங்கினாலும் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, கோடைகானல், பழனி உள்ளிட்ட இடங்கள் வழியாக இறுதியாக கோவை சென்றடைகிறது. 

ரயில்களில் வெள்ளை நிற பெட்ஷீட்கள் வழங்கப்படுவது ஏன்? இதுதான் காரணமா?

இந்த டூர் பேக்கேஜ் இப்போது IRCTC வெளியிட்டுள்ள அட்டவணையின்படி முதல் நாள் ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு ரயில் மாலையில் திருச்சி வந்தடைகிறது. மாலை திருச்சியில் இருந்து புறப்படும் அந்த வண்டி தஞ்சாவூரில் உள்ள ஜம்புகேஸ்வரா ஆலயம்,பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பகுதிகளை கவர் செய்து விட்டு மீண்டும் இரண்டாம் நாள் மாலை மதுரைக்கு புறப்படும். 

மூன்றாம் நாள் காலை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட சில பகுதிகளை பார்த்துவிட்டு அங்கிருந்து கொடைக்கானலுக்கு செல்லும் இந்த சுற்றுலா, அங்குள்ள பல இடங்களில் சுற்றுலா ஏற்பாடுகளை செய்திருக்கிறது. நான்காம் நாள் கொடைக்கானல் முழுவதும் சுற்றிப் பார்த்த பிறகு, ஐந்தாம் நாள் காலை பழனிக்கும், கோவைக்கும் இடையே உள்ள நல்ல பல கோவில்களையும் அழகிய மலை கிராமங்களையும் சுற்றி பார்க்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 

அதன் பிறகு 6ம் நாள் கோவையிலிருந்து மீண்டும் அந்த ரயில் ஹைதராபாத் புறப்படுகிறது. வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இந்த பேக்கேஜ் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் பயணம் செய்ய ஒருவராக தனியே பயணிப்பவர்களுக்கு 45,000 ரூபாயும். இருவராக பயணிப்பவர்களுக்கு 34,350 ரூபாயும், மூவராக பயணிப்பவர்களுக்கு 32,800 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது. 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு படுக்கை வசதியோடு சேர்த்து 26,900 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. (இந்த கட்டணம் ஒரு நபருக்கானது என்பது குறிப்பிடத்தக்கது)

IRCTC Tour: ரூ. 14,500 -ல் சென்னையில் இருந்து தஞ்சாவூர் , நவக்கிரக ஸ்தலங்களுக்கு டூர்; சூப்பர் ஆஃபர்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios