ஆசிரியர்கள் யார்..? இந்தளவு நாம் போற்றி புகழ காரணம் என்ன..? சிலிர்க்க வைக்கும் சில உதாரணங்கள்..
இந்தியாவின் முதல் குடியரசு துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரும் ஆண்டும் ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நாளில் தனது வாழ்க்கையில் நன்னெறிகளையும் ஒழுக்கங்களையும் கற்றுக்கொடுத்த ஆசிரியர் பெருமக்களை, மாணவர்கள் வாழ்த்தி வணங்குவர். இந்நிலையில் ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்று இலக்கியம் கூறுகிறது என்பதை இத்தொகுப்பில் காணலாம்.
“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்”என ஆத்திச்சூடியில் ஒளவையார் பாடியிருக்கிறார். அதன்படி எழுத்து அறிவை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் என்பவர் இறைவனுக்கு சமமாக பார்க்கப்படுபவர் என்பதை விளக்குகிறது. ஒரு குழந்தைக்கு அன்பையும் அறிவையும் போதிப்பதில் தாய் , தந்தையருக்கு அடுத்ததாக ஆசிரியர் உள்ளனர். வாழக்கை எனும் பாடத்தை கற்றுக்கொடுத்து மாணவர்களுக்கு ஒரு வழிக்காட்டியாக ஆசிரியர்கள் விளங்குகின்றன.
இதையும் படிங்க;- Teachers Day 2022: ஆசிரியர் தினத்தில் உங்கள் ஆசிரியருக்கு என்ன கிஃப்ட் கொடுக்க போறீங்க...இதோ பெஸ்ட் ஐடியா...
ஒவ்வொரு ஆசிரியர்களும் மாணவர்களை அவர்களது எதிர்காலம் குறித்து சிந்தித்து, அதற்கேற்றாற்போல் நல்சிந்தனைகளை கற்றுக் கொடுத்து தயார் செய்கின்றனர். ஆசிரியர் எனும் அடையாளம், சமூகத்தில் பெரும் மதிப்பை உடையது. ஏனெனில் அது ஒரு நல் இளைய சமுதாயத்தை உருவாக்க அச்சாணியாக உழைத்து வருகிறது.
மேலும் படிக்க:ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாட காரணம் என்ன? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு!!
ஒரு மனதன் தன் வாழ்நாளில் அடையும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உரமாகவும் விதையாகவும் ஒரு ஆசிரியரே இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. மேலும் இளமை காலங்களில் மாணவ செல்வங்கள், வழி தவறி செல்லாமல் இருக்க தோழனாக மாறி அறிவுரைகளை வழங்கும் மகத்தான பணியையும் ஆசிரியர்கள் செய்கின்றனர்.
குழந்தைகள் நாட்டின் எதிர்காலம், எனவே அவர்கள் நேர்மறையாக வளர்க்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களை வெறும் பாடத்தை மட்டும் நடத்தி செல்லாமல், வாழ்க்கையில் ஓட்டத்தையும் கற்றுக்கொடுக்கின்றனர். மேலும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் அறிவாற்றல் மட்டுமின்றி நல்ஒழுக்கங்களையும் பண்புகளையும் கற்பிக்கும் இடமாக பள்ளிக்கூடங்களே உள்ளன.
ஆசிரியர்கள் நம்முடைய ஒவ்வொருவரின் வெற்றியின் உண்மையான தூண்கள். அறிவைப் பெறவும், திறன்களை மேம்படுத்தவும், நம்பிக்கையை வளர்க்கவும் வெற்றிக்கான சரியான பாதையை தேர்வு செய்யவும் அவர்கள் நமக்கு உதவுகின்றன. ஒரு குழந்தை சிறந்த பொறியியலாளராகவோ, மருத்துவராகவோ, விஞ்ஞானிகளாகவோ, கணினி நிபுணர்களாகவோ, விளையாட்டாளராகவோ, ஏன் ஒரு சிறந்த மனிதராகோ வலம் வருபவர்களாக வாழ்க்கைப் பாதைகளைக் காட்டிக் கொண்டே இருப்பவர்கள்
ஆசிரியர்கள்.
ஆசிரியர் பணி என்பது மற்ற பணிகளை விட வேறுபட்டது. பொருளாதார நோக்கில் இல்லாமல் சேவை மனபான்மையோடு பணியாற்ற வேண்டிய இடம். தனது வாழ்வையே ஆதாரமாக்கும் பணி. ஊதியத்திற்காக அந்தப் பணி அல்ல என்பதுதான் ஒரு சிறந்த ஆசிரியரின் தத்துவம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஆசிரியர் பணி என்பது ஒரு உயிரோட்டமான மற்றும் அர்ப்பணிப்புள்ள பணி.
ஒரு சிறந்த ஆசிரியர் வகுப்பறைக்குள் மட்டுமே ஆசிரியராக இருப்பதில்லை, இருக்கவும் முடியாது என்ற கூற்று உண்மையானது. எனவே மாணவர்களின் வாழ்க்கையை சிறந்ததாக மாற்ற தன்னலமற்று உழைக்கும் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஒவ்வொரு மாணவரும் தனது ஆசிரியரின் பங்களிப்பை ஊக்குவிக்கவும் ஆதரிக்கவும், அவர்களின் தன்னலமற்ற முயற்சிகளுக்கு ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது நன்றி மற்றும் மரியாதை அளிக்க வேண்டும். என்னை சிறந்த வழியில் பயணிக்க உதவிய பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..
மேலும் படிக்க: Teachers Day: ஆசிரியர் தினம் இந்தியாவிற்கு மட்டுமா..? இதன் வரலாற்று, முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்