Teachers Day 2022: ஆசிரியர் தினத்தில் உங்கள் ஆசிரியருக்கு என்ன கிஃப்ட் கொடுக்க போறீங்க...இதோ பெஸ்ட் ஐடியா...
Teachers Day 2022 Gift: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த நாளில் உங்கள் ஆசிரியருக்கு எந்த மாதிரியான கிஃப்ட் கொடுத்து அசத்தலாம் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
Teachers Day 2022 Gift:
நண்பர்கள் தினம், காதலர் தினம், சகோதர் தினம் என எத்தனையோ பண்டிகைகள் விழாக்கள் வந்து செல்கின்றனர், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக, ஒவ்வொரு நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. அந்த வரிசையில், ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு ஆகியவற்றை கற்பிக்கும் ஆசிரியர்களை சிறப்பிக்கும் வகையில், ஆசிரியர் தினம் உலகளவில் பொதுவாக அக்டோபர் 5 ஆம் தேதியும் சீனா, மலேசியா, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளிலும் கொண்டாடப்படுகிறது.
Teachers Day 2022 Gift:
குறிப்பாக இந்தியாவில் சர்வப்பள்ளி திரு.ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டப்படுகிறது..ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான ஆசிரியர்கள் மனதிற்கு பிடித்த பரிசு ஒன்றை கொடுத்து அசத்துவார். அப்படியாக, உங்கள் ஆசிரியருக்கு நீங்கள் என்ன பரிசு வாங்கிக் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்..
Teachers Day 2022 Gift:
சாக்லேட்:
சாக்லேட்டுகள் ஒரு சிறந்த பரிசு ஆகும். ஆகவே ஆசிரியருக்கு வித்தியாசமான சுவையுடைய சாக்லெட்டுகளைக் கொடுக்கலாம். மேலும், சாக்லேட்கள் உண்பது மகிழ்ச்சியின் அடையாளம் என்பதையும் தாண்டி, ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. சாக்லெட்களின் சுவை நாம் இருக்கும் சூழலை மறக்க செய்து மகிழ்ச்சியை தர கூடியவை. அப்படி இல்லை என்றால், வீட்டில் இருந்து இனிப்புகளை தயார் செய்து கொண்டு போய் கொடுங்கள்.
Teachers Day 2022 Gift:
டைரி மற்றும் பேனா:
ஆசிரியர்கள் எப்போதும் அதிக நேரம், பேனா உபயோகிப்பவர்கள்..எனவே அவர்களுக்கு நீங்கள் பேனாவுடன், டைரியும் சேர்த்து கொடுக்கலாம். இதனால், ஒரு உபயோகமான பொருளை கொடுத்தது போன்றும் இருக்கும்.
Teachers Day 2022 Gift:
காற்றை தூய்மையாக்கும் செடிகள்:
காற்றை தூய்மையாக்கும் சில வகை செடிகளை வாங்கி உங்கள் அறிவியல் ஆசிரியருக்கு நீங்கள் பரிசளிக்கும் போது அது அர்த்தமுள்ள ஒன்றாக இருக்கும். மேலும் உங்கள் மீது நல்ல பிம்பத்தை ஏற்படுத்தும்.
Teachers Day 2022 Gift:
வாழ்த்து அட்டை:
ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையிலான கவிதைகள் அடங்கிய வாழ்த்து அட்டை உங்கள் ஆசிரியர்களுக்கு பரிசளிப்பதன் மூலம் அவர்களை மகிழ்ச்சியடைய செய்யலாம். மேலும், அவர்களது மனதை தொடும் வகையில், நன்றி கூறிய வார்த்தைகளை உங்கள் கைப்பட எழுதி கொடுங்கள்.
Teachers Day 2022 Gift:
புத்தகங்கள்:
உங்கள் ஆசிரியர் ஒரு புத்தகப் பிரியர் என்றால் யோசனையே இல்லாமல் அவர்களுக்கு நல்ல பயனுள்ள ஒரு புத்தகத்தை வாங்கி கொடுத்து விடுங்கள். நிச்சயமாக இதற்கு அவர் நன்றி தெரிவிப்பதுடன், ஆழ்மனதில் இருந்து அன்பை வெளிப்படுத்த கூடும்.
Teachers Day 2022 Gift:
பூக்கள்:
ஆசிரியர்களை பூக்கள் கொடுத்து வரவேற்கும் பழக்கம், காலம் காலமாக இருந்து வருகிறது..இந்த பரிசு பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி, பாஸிட்டிவான சூழ்நிலையை உருவாக்கும். மேலும், ஆசிரியரின் மனதை குளிரச் செய்யும்.