Teachers Day: ஆசிரியர் தினம் இந்தியாவிற்கு மட்டுமா..? இதன் வரலாற்று, முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Teachers Day 2022: கல்வி பணிகளில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூறும், நாளாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
Teachers Day
சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 1962 முதல், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதே நாளில் உலகளவில் பொதுவாக அக்டோபர் 5 ஆம் தேதியும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
teachers day
ஆசிரியர் தினத்தை ஏன் கொண்டாட வேண்டும்..?
மாதா, பிதா வரிசையில் மூன்றாவது இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள், நமக்கு ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு என பல்வேறு விஷயங்களைக் கற்பித்து, உண்மையான வழிகாட்டியாக திகழ்கின்றனர். ஆம், சுய நலம் பாராமல் மற்றவர்களின் குழந்தைகள் முன்னேற உழைப்பவர்களாக இருக்கிறார்கள் ஆசிரியர்கள். ஊதியம் வாங்கி வேலை பார்க்கிறோம் என்ற உணவை தாண்டி, பல தியாகங்களை செய்து அர்ப்பணிப்புடன் தங்கள் மாணவர்களின் உயர்வுக்கு காரணமாகவும் அமைகிறார்கள் இன்றும் பல ஆசிரியர்கள்.
Teachers Day
அதன் வரலாற்று முக்கியத்துவம்:
கல்வி தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களின் தியாகத்தை கவுரவிக்கும் வகையில், கடந்த 1994ம் ஆண்டு உலக ஆசிரியர் தினம் அக்டோபர் 5ம் தேதி அனுசரிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) அறிவித்தது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், சீனாவில் செப்டம்பர் 10, மலேசியாவில் மே 16, ஸ்பெயினில் நவம்பர் 27ம் தேதி மற்றும் ஈராக்கில் மார்ச் 1ம் தேதி என வெவ்வேறு தேதிகளில் ஆசியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
Teachers Day
அக்டோபர் 5ம் தேதி கொண்டாட என்ன காரணம்..?
அக்டோபர் 5ம் தேதி சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் என்னவென்றால், 1966ம் ஆண்டில், ஒரு சிறப்பு அரசாங்கங்களுக்கிடையேயான மாநாட்டின் போது ஆசிரியர்களின் நிலை குறித்த யுனெஸ்கோ பரிந்துரையை அம்மாநாட்டில் ஏற்று கொள்ளப்பட்டதே ஆகும்.
Teachers Day
ஆசிரியர் தினத்தன்று, குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆசிரியர்களாக அலங்கரித்து, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படும் வகுப்புகளில் சொற்பொழிவுகளை மேற்கொள்கின்றனர். அதுமட்டுமின்று, சிறந்த ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக, மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி வருகின்றன.