இந்த பதிவில் மணத்தக்காளி சூப் தயாரிக்கும் முறை மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

வாய் புண், அல்சர், கருப்பை புண் என அனைத்து பிரச்சினைகளையும் குணப்படுத்த மணத்தக்காளி கீரை உதவுகிறது. இதில் இருக்கும் அருமருந்து வேறு எந்த ஒரு உணவிலும் இல்லை என்பதுதான் உண்மை. மணத்தக்காளி கீரை கொஞ்சம் கசப்பு தன்மையுடையது தான், ஆனால் இதில் சூப் செய்து குடித்து வந்தால் அல்சர் நிரந்தரமாக குணமாகிவிடும். மேலும் மணத்தக்காளி கீரையை வாரத்திற்கு 2 நாட்கள் பொரியல், மசியல் என எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று சொல்லப்படுகிறது. சரி வாங்க இப்போது இந்த பதிவில் மணத்தக்காளி கீரையில் சூப்பரான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மணத்தக்காளி கீரையில் சூப் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் ;

மணத்தக்காளி கீரை - 1 கட்டு 

மிளகு - 10-15 

சீரகம் - 1 ஸ்பூன் 

பூண்டு - 10 

சின்ன வெங்காயம் - 50 கிராம் 

வெந்தயம் - கால் ஸ்பூன் 

மஞ்சள் - 2 சிட்டிகை 

உப்பு - தேவையான அளவு 

பெருங்காயம் - சிறிதளவு 

இஞ்சி - 1 துண்டு 

கொத்தமல்லி விதை - 1 ஸ்பூன்

செய்முறை :

மணத்தக்காளி கீரைகள் சூப் செய்ய முதலில் கீரையை நன்கு கழுவி நறுக்க வைத்துக் கொள்ளுங்கள். கூடவே சின்ன வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றாமல் வெந்தயத்தை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். இப்போது அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கீரையை போட்டு நன்கு வேக வைக்கவும். பிறகு மிக்ஸி ஜாரில் வெந்தயம், மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி விதைகள் ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று அரைத்து கொள்ளுங்கள். அந்த பொடியை அடுப்பில் இருக்கும் கீரையுடன் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கி வைத்த வெங்காயம், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, பெருங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் பாதியாக சுண்டியதும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் டேஸ்டியான மணத்தக்காளி கீரை ரெடி.

மணத்தக்காளி கீரை சூப் நன்மைகள் :

- வயிற்றுப்புண் மற்றும் வாயு புண்ணை ஆற்றும்.

- அஜீரண பிரச்சனையை போக்கி செரிமானத்தை மேம்படுத்தும்.

- மணத்தக்காளி கீரையில் இருக்கும் வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

- மணத்தக்காளி கீரையில் வைட்டமின் ஏ சத்து நிறைந்திருப்பதால் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

- சிறுநீரகம் சரியான முறையில் வெளியேற இது உதவுகிறது.