உங்க தோல் எந்த வகைன்னு கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்!!
Skin Types : நீங்கள் உங்கள் சொந்த தோல் வகையை பற்றி அறியாமல் தவறான தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தினால் அவை சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே உங்களது சருமத்தின் வகையை பற்றி அறிய எளிதான வழிகள் இங்கே.
நீங்கள் பார்லருக்கு செல்லும் போதெல்லாம் அவர்கள் உங்களிடம் கேட்கும் முதல் கேள்வி உங்களது தோல் எந்த வகை என்பது தான். ஆனால் பலருக்கும் இது குறித்து சரியாக தெரியாது. பொதுவாகவே, நமது சருமமானது நான்கு முக்கிய வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சாதாரண சருமம், உலர்ந்த சருமம், எண்ணெய் பிசுக்கான சருமம் மற்றும் கலவையான சருமம்.
உங்களது சொந்த தோல் வகை பற்றி அறிய முதலில் தோலின் தோற்றம் மற்றும் உணர்வை பற்றி அறிந்து இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் சொந்த தோல் வகையை பற்றி அறியாமல் தவறான தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தினால் அவை சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே உங்களது சருமத்தின் வகையை பற்றி அறிய எளிதான வழிகள் இங்கே.
இதையும் படிங்க: முகத்திற்கு ஒருபோதும் இந்த 5 பொருட்களை யூஸ் பண்ணாதீங்க.. அழகுக்கு பதில் ஆபத்து தான் வரும் ஜாக்கிரதை!
சருமத்தின் வகையை சோதிப்பது எப்படி?:
- இதற்கு முதலில் உங்கள் முகத்தை நன்கு க்ளென்சர் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.
- முகத்தை நன்கு சுத்தம் செய்த பிறகு எந்தவித தோல் பராமரிப்பு அல்லது அழகு சாதன பொருட்களை பயன்படுத்தக் கூடாது சருமத்தை இயற்கையான முறையில் காய வைக்க வேண்டும்.
- பிறகு ஒரு மணி நேரம் கழித்து உங்கள் சருமத்தை சரி பார்க்கவும். அதாவது, உங்கள் சருமம் எண்ணெய் பசையாக இருக்கிறதா? வறண்டு இருக்கிறதா அல்லது சாதாரணமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: ஃபேஸ் பேக் யூஸ் பண்ணும் போது 'இந்த' தவறுகளை ஒருபோதும் செய்யாதீங்க..!!
என்ன வகையான தோல் என்பதை எப்படி கண்டுப்பிடிப்பது?:
- நீங்கள் உங்கள் தோலை சுத்தம் செய்து நன்கு உலர் வைத்த பிறகு, உங்கள் சருமம் நீரேற்றமாகவும், எண்ணெய் பசையாகவும், வறட்சி இல்லாமலும் இருந்தால் உங்கள் சருமம் ஆரோக்கியம் மற்றும் இயல்பான சருமம் என்று அர்த்தம்.
- அதேசமயம் உங்கள் சருமம் செதிலாகவும், வறண்டு காய்ந்தது போல் இருந்தால், அது வறண்ட சருமமாகும்.
- உங்கள் முகத்தில் எண்ணெய் பசையாகவும், பார்ப்பதற்கு பளபளப்பாகவும், துளைகள் பெரியதாகவும் இருந்தால் உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருக்கிறது.
- ஒருவேளை உங்களது சருமம் எண்ணெய் மற்றும் வறண்டதாகவும் இருந்தால் அது கலவையான சருமம் ஆகும்.
- உங்கள் முகத்தில் சிவத்தல் அல்லது எரிச்சல் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உங்கள் சருமம் திறன் கொண்டது.
உங்கள் தோல் வகையை நீங்கள் அறிந்த பிறகு உங்கள் சருமத்திற்கு ஏற்ப சரியான தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துங்கள். ஒருவேளை, உங்களுக்கு சரியாக இன்னும் உங்களது தோல் வகை குறித்து தெரியவில்லை என்றால் அல்லது குழப்பம் இருந்தால் உடனே தோல் பராமரிப்பு நிபுணரை அணுக வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D