ஃபேஸ் பேக் யூஸ் பண்ணும் போது 'இந்த' தவறுகளை ஒருபோதும் செய்யாதீங்க..!!
Face Pack Common Mistakes : நீங்கள் உங்கள் முகத்திற்கு ஃபேஸ் பேக் பயன்படுத்தும் போது செய்யக்கூடாத சில தவறுகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
பெரும்பாலான, பெண்கள் தங்கள் முகத்தை அழகாக்க ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்துகின்றனர். முகப்பொலிவைத்தக்க வைக்க இது மிகவும் உதவுகிறது. இதன் மூலம் சருமமும் உள்ளிருந்து சுத்தமாகும். இன்னும் சிலரோ பார்லருக்கு சென்று ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால், பல வீட்டில் தயாரித்து தயாரிக்கப்பட்ட பேஸ் பேக்குகளை தான் அதிகம் விரும்புகிறார்கள்.
வீட்டில் ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தும் போது பல நேரங்களில் நாம் தெரிந்தோ தெரியாமலோ சில தவறுகளை செய்கிறோம். இதனால் மிகவும் பொலிவிழந்து காணப்படும்
இத்தைக சூழ்நிலையில், நீங்கள் வீட்டில் பேஸ் பேக்கை பயன்படுத்துவதன் மூலம் பளபளப்பான சருமத்தைப் பெற விரும்பினால், அதை பயன்படுத்தும் முன் சில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். எனவே, நீங்கள் உங்கள் முகத்திற்கு ஃபேஸ் பேக் பயன்படுத்தும் போது செய்யக்கூடாத சில தவறுகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: தேனை வச்சி இந்த 6 ஃபேஸ் மாஸ்க் ட்ரை பண்ணுங்க.. உங்க முகம் தங்கம் போல ஜொலிக்கும்!!
ஃபேஸ்பேக் பயன்படுத்தும் போது செய்யக்கூடாத தவறுகள்:
1. முகத்தை சுத்தம் செய்யாமல் இருப்பது: ஃபேஸ் பேக் போடும் முன் உங்கள் முகத்தை சுத்தம் செய்யாவிட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் ஃபேஸ் பேக் போடும் முன் முகத்தை கழுவாமல் இருப்பது பெரிய தவறு. அழுக்கு மற்றும் எண்ணெய் அடுக்கு ஃபேஸ் பேக்கின் ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் ஊடுருவாமல் தடுக்கும். மேலும், இதனால் நீங்கள் போடு ஃபேஸ்புக் உங்கள் சருமத்திற்கு பளபளப்பை கொடுக்காது.
2. தவறான ஃபேஸ் பேக்: நீங்கள் உங்கள் சருமத்தின் வகை மற்றும் பிரச்சினைகளுக்கு ஏற்ப ஃபேஸ் பேக் பயன்படுத்துங்கள் உங்கள் சருமம் எண்ணெய் பசையாக இருந்தால் எண்ணெய் சார்ந்த பேஸ் பேக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும். உங்கள் சருமம் வறண்டு இருந்தால் உலர்ந்த பேஸ் பேக்குகளை தவிர்க்கவும்.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் உங்க முகம் ஜொலிக்க 'இந்த' ஸ்கின் கேர் டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க!
3. நேரத்தை கவனிக்காமல் இருப்பது: பல சமயங்களில் நாம் ஃபேஸ் பேக்களை பயன்படுத்திப் பிறகு மற்ற விஷயங்களை செய்ய தொடங்குவோம். இதன் காரணமாக பேஸ் பேக் நீண்ட நேரம் முகத்தில் இருக்கும். ஆனால், இப்படி ஃபேஸ் பேக் நீண்ட நேரம் முகத்தில் இருந்தால் சருமம் விரிந்து காணப்படும். எனவே, நீங்கள் ஃபேஸ் பேக் போடும்போது எவ்வளவு நேரம் முகத்தில் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
4. தினமும் பயன்படுத்துதல்: நிபுணர்களின் ஆலோசனையின்றி, பேஸ் பார்க்குகளை தினமும் பயன்படுத்தினால் தோல் எரிச்சல் போன்ற பிற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே உங்கள் முகத்திற்கு பயன்படுத்துங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D