தேனை வச்சி இந்த 6 ஃபேஸ் மாஸ்க் ட்ரை பண்ணுங்க.. உங்க முகம் தங்கம் போல ஜொலிக்கும்!!
Honey Face Mask For Glowing Skin : வீட்டிலேயே தேனுடன் சில பொருட்களை பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
பெண்கள் ஒவ்வொருவரும் தங்கள் முகம் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், அதிகரித்து வரும் மாசுபாட்டால் பளபளப்பான சருமத்தை பெறுவது மிகவும் கடினம்.
இத்தகைய சூழ்நிலையில், உங்கள் முகத்தை பளபளக்க தேன் நிச்சயம் உங்களுக்கு உதவும் தெரியுமா? ஆம், தேனில் இருக்கும் பல கூறுகள், முகத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே, தேனுடன் சில பொருட்களை பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கலாம் வாங்க..
Honey and Lemon
தேன் மற்றும் எலுமிச்சை: இந்த ஃபேஸ் மாஸ்க் தயாரிக்க, ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு நன்கு கலந்து அதை முகத்தை தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இதனால் உங்கள் முகம் பொலிவடையும்.
Honey and Oat
தேன் மற்றும் ஓட்ஸ்: முதலில் 1 கிளாஸ் சூடான தண்ணீரில் ஓட்ஸ் போட்டு ஊற வைக்கவும். பிறகு தண்ணீர் வடிகட்டி அதை ஒரு பவுலில் போட்டு அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, உங்கள் முகத்தில் தடவி பிறகு கழுவுங்கள். இதனால் உங்கள் முகமும் பொலிவடையும்.
Honey and Curd
தேன் மற்றும் தயிர்: இந்த ஃபேஸ் மாஸ்க் தயாரிக்க தேன் மற்றும் தயிரை ஒரு பவுலில் எடுத்து நன்கு கலந்து, 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாகும். இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தை ஈரப்பதமாக்கும்.
Honey and Turmeric
தேன் மற்றும் மஞ்சள்: தேனில் மஞ்சள் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தின் பொலிவை அதிகரிக்கச் செய்யும். மேலும் இதை பயன்படுத்துவதனால் முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் மறையும்.
Honey and Banana
தேன் மற்றும் வாழைப்பழம்: வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலந்து, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவும். இதனால் உங்கள் முகம் பொலிவாகும்.
Honey and Aloe Vera Gel
தேன் மற்றும் கற்றாழை ஜெல்: தேன் மற்றும் கற்றாழை ஜெல்லை சம அளவில் எடுத்து நன்கு கலந்து, அதை பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளபளக்கும் மற்றும் இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கும்.