மழைக்காலத்தில் உங்க முகம் ஜொலிக்க 'இந்த' ஸ்கின் கேர் டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க!
Monsoon Season Skin Care Tips : மழைக்காலத்தில் ஆரோக்கியம் மட்டுமல்ல சருமம் தொடர்பான பிரச்சனைகளும் அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், சில எளிய உதவி குறிப்புகள் பின்பற்றுவதன் மூலம் மழைக்காலத்திலும் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
மழைக்கால மிகவும் இனிமையான காலமாகும் வெப்பம் மற்றும் வலுவன சூரிய ஒளியில் இருந்து நமக்கு நிவாரணம் அளிக்கிறது. ஆனால் இந்த சீசனில் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, சருமத்தையும் கவனித்துக் கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில், இந்த பருவத்தில் பலர் பலவிதமான தோல் தொடர்பான பிரச்சனைகளால் சிரமப்படுகின்றனர். இந்த பருவத்தில் முகப்பரு பிரச்சனை அதிகரிக்கும் குறிப்பாக எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு. எனவே, இந்த பருவத்தில் தோல் தொடர்பான பிரச்சனைகள் இருந்து விடுபட, தோல் பராமரிப்பு வழக்கத்தை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம். எனவே, மழைக்காலத்தில் சருமத்தை எவ்வாறு பராமரிப்பது என்பதை குறித்து இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
மழைக்காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி?
1. முகத்தை சுத்தமாக வைக்கவும்:
மழைக்காலத்தில் வியர்வை மற்றும் ஈரப்பதம் காரணமாக முகத்தில் கூடுதல் எண்ணெய் தோன்ற ஆரம்பிக்கும். இதன் காரணமாக துளிகள் அடைபடுகின்றன. எனவே, முகத்தை அடிக்கடி சுத்தம் செய்வது மிகவும் அவசியம். மழையின் போது குறைந்தது மூன்று முறையாவது உங்கள் முகத்தை நல்ல ஃபேஸ் வாஷ் கொண்டு சுத்தம் செய்யுங்கள். இதன் மூலம் வியர்வை மற்றும் எண்ணெய் அகற்றப்படும். மேலும் அழுக்கு மற்றும் தூசிகளையும் அகற்றும்.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் முகத்தை கழுவும் போது இந்த தப்பு மட்டும் செய்யாதீங்க.. இல்லனா பிரச்சினைதான்..!
2. மாய்சரைஸர் பயன்படுத்துங்கள்:
மழைக்காலம் தானே என்று நினைத்து மாயசரைஸரை பயன்படுத்தாமல் இருக்காதீர்கள். ஏனெனில் மழைக்காலத்தில் குளிர்ந்த காற்று வீசுவதால் சருமம் சீக்கிரமே வறண்டு போய்விடும். எனவே, இவற்றை தடுக்க மாய்ஸ்ரைசரை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். மேலும், இது சருமத்தை ஹைட்ரேட் செய்யும், இயற்கை எண்ணெய்யை தக்க வைக்கும் மற்றும் அதிகப்படியான சரும எண்ணெய் உற்பத்தி செய்வதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, நீங்கள் தொடர்ந்து மாயசரைசஸர் பயன்படுத்தி வந்தால், உங்கள் சார்பாக மென்மையாகவும், மினுமினிப்பாகவும் மாறும்.
3. சன் ஸ்கிரீன் பயன்படுத்த மறக்காதீர்கள்:
மழைக்காலத்தில் சூரியனின் தாக்கம் அதிகமாக இல்லாவிட்டாலும் கண்டிப்பாக சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், மழைக்காலத்தில் புறா ஊதா கதிர்கள் கூட உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
இதையும் படிங்க: முல்தானி மிட்டியை தினமும் யூஸ் பண்ணா என்ன ஆகும்? அவசியம் 'இத' தெரிஞ்சுக்கோங்க..
4. ஸ்க்ரப் அவசியம்:
முகத்தின் துவாரங்கள் மூட ஆரம்பித்து, அழுக்கு மற்றும் தூசிகள் படிய ஆரம்பிக்கும். இத்தகைய சூழ்நிலையில், நிச்சயமாக ஸ்கிரப் அவசியம். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. எனவே, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ஸ்கிரப் செய்வது மிகவும் அவசியம். இதன் மூலம் சருமத்தின் மந்தமான தன்மை நீங்கும்.
5. தண்ணீர் குடிப்பது அவசியம்:
மழைக்காலத்தில் சருமத்தை நீரேற்றுமாக வைத்திருக்க தொடர்ந்து போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் இருந்து நச்சுப் பொருட்களை அகற்ற உதவுகிறது. போதுமான அளவு தண்ணீர் குடித்தால் சருமம் பளபளக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D