முகத்திற்கு ஒருபோதும் இந்த 5 பொருட்களை யூஸ் பண்ணாதீங்க.. அழகுக்கு பதில் ஆபத்து தான் வரும் ஜாக்கிரதை!
Skin Care Tips : சருமத்திற்கு எந்த பொருட்களை பயன்படுத்தக் கூடாது, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
தற்போது ஆண், பெண் இருவரும் சருமத்தை பராமரிப்பதில் அதிக அக்கறை கொள்கின்றனர். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் எக்கச்சக்கமான அழகு குறிப்புகள் நிறைந்துள்ளது. அதுவும் குறிப்பாக, வீட்டில் இருந்தும் சில பொருட்களை வைத்தே சருமத்தை பராமரிப்பது பற்றி அதிகம் சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே, அழகாக இருக்கும் முகத்தை இன்னும் அழகு சேர்க்க, எந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும், பயன்படுத்தக் கூடாது என்று அறியாமல் எல்லா டிப்ஸ்களையும் ட்ரை பண்ணி சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்கள்.
ஏனெனில், சிலருக்கு ஆயில் ஸ்கின், இன்னும் சிலருக்கோ ட்ரை ஸ்கின். இப்படி இருக்கும் போது எந்த பொருட்களை முகத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஆனால், பெரும்பாலானோர் தங்களது முகத்தை அழகாக்குவது தான் நோக்கமாகக் கொண்டு சில பொருட்களை பயன்படுத்தி சரும பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறார்கள். எனவே, சருமத்திற்கு எந்த பொருட்களை பயன்படுத்தக் கூடாது, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: ஃபேஸ் பேக் யூஸ் பண்ணும் போது 'இந்த' தவறுகளை ஒருபோதும் செய்யாதீங்க..!!
சருமத்திற்கு கேடு விளைவிக்கும் 5 பொருட்கள்:
1. வெள்ளை சர்க்கரை: நீங்கள் பேஸ் ஸ்கிரிப்களில் சர்க்கரை பயன்படுத்துகிறீர்கள் என்றால், இனி ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், சர்க்கரையில் இருக்கும் கூர்மையான விளிம்புகள் உணர்திறன் வாய்ந்த உங்கள் முக திசுக்களைச் சேதப்படுத்திவிடும். முக்கியமாக, முகப்பரு பிரச்சனையுள்ளவர்கள் ஒருபோதும் சர்க்கரை மற்றும் உப்பை முகத்திற்கு பயன்படுத்த வேண்டாம். மீறினால், முகத்தில் வடுகள், சருமம் சிவந்து போகும், வீக்கம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
2. இலவங்கப்பட்ட: இலவங்கப்பட்டையை நேரடியாக முகத்திற்கு பயன்படுத்துவது நல்லதல்ல. உங்களுக்கு இது தெரியுமா என்று தெரியவில்லை பொதுவாகவே எந்த விதமான அழகு சாதனப் பொருட்களிலும் இலவங்கப்பட்டதை பயன்படுத்தி இருக்க மாட்டார்கள். மேலும் மென்மையான சிரமத்திற்கு இலவங்கப்பட்டை நல்லது என்று பலர் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அது உண்மையில் நல்லதா என்று தெரிந்த பிறகு பயன்படுத்துங்கள்.
இதையும் படிங்க: தேனை வச்சி இந்த 6 ஃபேஸ் மாஸ்க் ட்ரை பண்ணுங்க.. உங்க முகம் தங்கம் போல ஜொலிக்கும்!!
3. சோடா உப்பு: சோடா உப்பை ஒருபோதும் முகத்திற்கு பயன்படுத்தவே கூடாது. ஏனெனில், இது சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய் பசையை நீக்கி பல சரும பிரச்சனைகளை உண்டாக்கும்.
4. எலுமிச்சை சாறு: எலுமிச்சை பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பொலிவாக்கும் மற்றும் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை அகற்ற பெரிதும் உதவும் என்று நினைத்து பலர் அதை நேரடியாக முகத்திற்கு பயன்படுத்துகிறார்கள். ஆனால், அப்படி செய்தால் அது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில், எலுமிச்சை பழத்தில் அமிலத்தன்மை நிறைந்துள்ளது. அவை சருமத்தின் பிஹெச் சமநிலையை சீர்குலைத்து, அதிகப்படு வறட்சி, சருமம் சிவத்து போதல், வீக்கம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். எனவே முகத்திற்கு ஒருபோதும் எலுமிச்சை சாறு பயன்படுத்தாதீர்கள்.
5. வெஜிடபிள் ஆயில்: இந்த ஆயில் பலருக்கு சாதகமான விளைவுகளை தந்தாலும், இதில் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால் இதை சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லதல்ல. இது மோசமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D