இயற்கையாகவே நெஞ்செரிச்சல் அபாயத்தை குறைக்கலாம்.. சிம்பிள் டிப்ஸ் இதோ..
இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) என்பது வாய் மற்றும் வயிற்றை (உணவுக்குழாய்) இணைக்கும் குழாயில் மீண்டும் மீண்டும் வயிற்று அமிலம் பாயும் போது ஏற்படுகிறது.
ஒருவரின் வயிறு ஆரோக்கியமாக இருந்தால், அவர் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ சிறந்த வழியாக கருதப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் ஒரு சிறிய அசௌகரியம் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். வயிற்றில் ஏற்படும் பொதுவான பிரச்சனை இரைப்பை உணவுக்குழாய் ஆசிட் ரிஃபளக்ஸ் நோய் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவை ஆகும்.
இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) என்பது வாய் மற்றும் வயிற்றை (உணவுக்குழாய்) இணைக்கும் குழாயில் மீண்டும் மீண்டும் வயிற்று அமிலம் பாயும் போது ஏற்படுகிறது. இது உங்கள் உணவுக்குழாயின் புறணியை எரிச்சலடையச் செய்யலாம். பலருக்கு அவ்வப்போது ஆசிட் ரிஃப்ளக்ஸ் ஏற்படுகிறது. இயற்கை வைத்தியம் வீட்டிலேயே அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சல் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு எளிதான வழியை வழங்குகிறது.
இந்த பழத்தை சாப்பிடலனா உங்களுக்கு தான் நஷ்டம்..! ஆண்மை குறைவை முற்றிலும் நீக்கும்..!!
ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சலுக்கான சில இயற்கை வைத்தியங்கள் இதோ
குறைவான உணவு: மூன்று வேளை அதிக உணவை சாப்பிடுவதற்கு பதிலாக, நாள் முழுவதும் குறைந்தது 5 முதல் 6 வேளை குறைந்த அளவிலான உணவுகளை சாப்பிடுங்கள். குறைவான உணவு உங்கள் அமிலத்திற்கு நிலையான உணவை வழங்க உதவும். எனவே, இது அமில உற்பத்தியை அதிகரிக்காமல், உங்கள் உணவை ஜீரணிக்கச் செய்கிறது.
உங்கள் உணவில் அதிக நார்ச்சத்து சேர்க்கவும்: நார்ச்சத்து ஒரு சீரான உணவின் முக்கிய பகுதியாகும். இது ஒரு நபர் ஃபில்லிங்காக உணரவும், செரிமானத்திற்கு உதவவும், அமில ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளை எளிதாக்கவும் உதவும்.
உங்கள் உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்ளுங்கள்: சிறிய அளவு இஞ்சி இரைப்பை குடல் எரிச்சலை போக்கலாம். வயிற்றில் அமிலம் உணவுக்குழாய் வரை பாயும் வாய்ப்பை இஞ்சி குறைக்கும். இஞ்சி வீக்கத்தையும் குறைக்கும், இதனால் அமில வீக்கத்தின் அறிகுறிகளை நீக்குகிறது.
இரவு உணவை சீக்கிரமாக எடுக்க வேண்டும் : உணவுக்கும் படுக்கைக்குச் செல்வதற்கும் இடையில் அதிக இடைவெளி விட்டுச் செல்வது, உணவை ஜீரணிக்க உடலுக்கு அதிக நேரம் கொடுக்கிறது. உட்காருவதும் உடலை சரியாக ஜீரணிக்க உதவுகிறது.உணவின் சரியான செரிமானம் அமில ரிஃப்ளக்ஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். எனவே, எளிய உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் நெஞ்செரிச்சல் மற்றும் பிற அசிடிட்டி அறிகுறிகளைக் கணிசமாகக் குறைக்கும்.
Summer foods tips : கொளுத்தும் வெயிலில் இந்த 6 ஊட்டச்சத்துக்கள் கண்டிப்பாக உங்களுக்கு தேவை...!!
- dr oz heartburn
- foods heartburn
- gerd heartburn
- heartburn
- heartburn causes
- heartburn cure
- heartburn diet
- heartburn foods
- heartburn home remedy
- heartburn relief
- heartburn remedies
- heartburn symptoms
- heartburn treatment
- heartburn treatment at home
- heartburn wafia
- heartburn.
- how to fix heartburn
- how to get rid of heartburn
- how to treat heartburn
- reduce heartburn
- treat heartburn
- wafia heartburn
- what causes heartburn
- what is heartburn