MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Summer foods tips : கொளுத்தும் வெயிலில் இந்த 6 ஊட்டச்சத்துக்கள் கண்டிப்பாக உங்களுக்கு தேவை...!!

Summer foods tips : கொளுத்தும் வெயிலில் இந்த 6 ஊட்டச்சத்துக்கள் கண்டிப்பாக உங்களுக்கு தேவை...!!

நீரிழப்பு, ஹீட்ஸ்ரோக் மற்றும் ஒவ்வாமை ஆகியவை கோடை மாதங்களில் அதிகரிக்கும் சில பொதுவான பிரச்சினைகளாகும். எனவே இந்த கோடையில் போதுமான அளவு நீரேற்றமாக இருங்கள்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Jun 08 2023, 05:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. இதனால் வெப்ப அலை எச்சரிக்கைகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு தூக்கத்திற்குப் பிறகு எழுந்த பிறகும் மக்கள் சோர்வாகவும் மற்றும் ஆற்றல் குறைவாகவும் உணரும் காலம் இது. கொளுத்தும் வெப்பம் மற்றும் ஈரப்பதமான காலநிலை, கடுமையான மாசுபாடு ஆகியவை உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். இதனால் மக்கள் தங்கள் ஊட்டச்சத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த கோடைகால உணவில் இருக்க வேண்டிய 6 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறித்தும், அது சாப்பிடுவதற்கான காரணம் குறித்தும் இங்கு பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

கோடைக்கான ஆற்றல் புரதம்:

உடலில் உள்ள ஒவ்வொரு செல்லின் கட்டுமானத் தொகுதியாக இருக்கும் ஒரு ஊட்டச்சத்து புரதம். கோடைக்கால வெயில் மனித உடலில் பலவீனம் மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கும். இதனால் மோசமான விளைவை அவர்களுக்கு ஏற்படுத்தும். நீடித்த ஆற்றல் மட்டங்களை மேம்படுத்துவதில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. விதைகள், நட்ஸ்கள், பருப்பு வகைகள், குயினோவா போன்றவற்றின் மூலம் போதுமான அளவு புரதத்தை உட்கொள்வது உங்கள் ஆற்றல் மட்டங்களை அதிகமாக வைத்திருக்கவும், முழுமையான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். உட்கொள்ளல். செரிமானத்தின் போது புரதம் அதிக வெப்பத்தை உருவாக்குவதால், கோடைக்காலத்தில் இதை எதிர்த்துப் போராட தண்ணீரை அதிகமாக எடுத்து குடிக்கவும்.

37

சோர்வு மற்றும் பலவீனத்தை எதிர்த்துப் போராடும் பொட்டாசியம்:

பொட்டாசியம் ஒரு முக்கியமான எலக்ட்ரோலைட்டுகளில் ஒன்றாக செயல்படுகிறது. இது ஆரோக்கியமான உடல் செயல்பாட்டை உறுதி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியாவின் கடுமையான கோடை மாதங்களில் வியர்ப்பது பொட்டாசியத்தை இழக்க வழிவகுக்கும், இது சோர்வு, பலவீனம் மற்றும் தசைப்பிடிப்புகளை ஏற்படுத்தும். எனவே பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

இதற்கு சாப்பிட வேண்டிய உணவுகள்: வாழைப்பழங்கள், பீன்ஸ், ப்ரோக்கோலி, வெண்ணெய், பயறு போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவுகள் மற்றும் உலர்ந்த பழங்கள் திராட்சை மற்றும் பாதாம் போன்றவை.

47

நோய் எதிர்ப்பு சக்தியை வைட்டமின் சி மூலம் மேம்படுத்தவும்:

வைட்டமின் சி நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். இது சில உணவுகளில் இயற்கையாகவே உள்ளது மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கும், வலுவான நோய் எதிர்ப்பு சக்திக்கும் அவசியம். ஃப்ரீ ரேடிக்கல்கள் சரும பாதிப்பை ஏற்படுத்தலாம் மற்றும் வைட்டமின் சி, சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தைப் பாதுகாக்க உதவும்.

இதற்கு சாப்பிட வேண்டிய உணவுகள்: தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, உருளைக்கிழங்கு, ப்ரோக்கோலி மற்றும் ஆரஞ்சு, திராட்சைப்பழம், எலுமிச்சை மற்றும் கிவி போன்ற சிட்ரஸ் பழங்கள் ஆகியவை அடங்கும்.

57

கோடைகாலத்திற்கான துத்தநாகம்:

துத்தநாகம் ஒரு கனிமமாகும். இது ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்க மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கோடை காலம் பெரும்பாலும் வைரஸ் காய்ச்சல் மற்றும் ஒவ்வாமையின் பருவமாகும். எனவே, துத்தநாகம் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதன் மூலம் அதைத் தடுக்க உதவுகிறது.

இதற்கு சாப்பிட வேண்டிய உணவுகள்: நட்ஸ்கள், முந்திரி, பூசணி விதைகள், முழு தானியங்கள் மற்றும் கார்ன்ஃப்ளேக்ஸ்.

67

எப்போதும் நீரேற்றத்துடன் இருங்கள்:

மனித உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று தண்ணீர். உயரும் வெப்பநிலை மனித உடல் வியர்வை மூலம் நிறைய திரவங்களை இழக்கச் செய்யலாம். ஒரு நாளைக்கு 8-10 கிளாஸ் தண்ணீர் குடிப்பதே சிறந்த வழி. இதற்கு வெள்ளரிகள், தர்பூசணி மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்ற உணவுகளையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக குடிக்க வேண்டிய மற்றும் மறந்தும் தொடக்கூடாத பானங்கள் என்னென்ன தெரியுமா?

77

சமநிலையின்மைக்கான மெக்னீசியம்:

உடலில் திரவ சமநிலையை ஒழுங்குபடுத்துவதற்கு மெக்னீசியம் இன்றியமையாதது. கூடுதலாக, இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கும், மனிதர்களின் இரத்த அழுத்தத்தை சரியான முறையில் கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது. இது குறிப்பாக கோடை மாதங்களில் எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகளின் வாய்ப்புகள் இருக்கும் போது.

இதற்கு சாப்பிட வேண்டிய உணவுகள்: வெண்ணெய், குயினோவா, பாதாம், வேர்க்கடலை மற்றும் பூசணி, சியா  போன்றவை ஆகும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
கோடைக்காலம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Idiyappam Biryani : இடியாப்பத்தில் பிரியாணியா? வித்தியாசமான சுவையில் ஒரு சூப்பர் ரெசிபி!
Recommended image2
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image3
Chutney Recipes: காலை உணவுக்கு என்ன சட்னி செய்வது? குழப்பம் வேண்டாம்… 10 நிமிடத்தில் செய்யக்கூடிய 5 சட்னி ரெசிபிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved