"ஆண்மை குறைபாடு"..! உணவில் சின்னதா ஒரு மாற்றம்..! அது என்ன தெரியுமா..?

மாறி வரும் உணவு பழக்க வழக்கங்கள், கலப்பிட உணவு, மன அழுத்தம், ஓய்வே இல்லாமல் வேலை வேலை என ஓடிக்கொண்டே இருப்பதால், ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு ஒன்றல்ல .. இரண்டல்ல..

அதிலும் குறிப்பாக, ஆண்கள் அதிக மன அழுத்தம் அடையும் போதும், சரியான ஊட்டத்சத்து இல்லாத உணவு பொருட்களை எடுத்துக்கொள்ளும் போதும் 

பச்சை காய்கறிகள்

அந்தவகையில் பச்சை காய்கறிகளை எடுத்துக்கொள்வது மிகவும் சிறந்தது. அதிலும் குறிப்பாக கீரை வகைகளை எடுத்துக்கொண்டால், அதில் உள்ள நைட்ரேட் ரத்த நாளங்களை நன்கு விரிவடைய செய்யும். எனவே ஆணுறுப்பில் ரத்த நாளங்கள் நன்கு விரிவடைந்து ரத்த ஓட்டம் சீராக இருக்கும் தருணத்தில் அவர்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுவதை மிக எளிதாக  தவிர்க்கலாம். 

டார்க் சாக்லேட்
 
இதற்கு அடுத்தபடியாக டார்க் சாக்லேட்.பொதுவாகவே டார்க் சாக்லேட் ரத்த நாளங்களை விரிவடைய செய்து ரத்த சுழற்சியை சீராக இருக்க செய்யும். மேலும் உடலில் இருக்கக்கூடிய கழிவுப் பொருட்களை வெளியில் நீக்கும். செல்களுக்கு புத்துணர்வு கொடுக்கும்.

பிஸ்தா 

பிஸ்தாவை தினமும் இரண்டு பீஸ் உண்டு வந்தால், உடல் நல்ல ஆரோக்கியமாக இருப்பதுடன் ஆண்மை குறைபாடு ஏற்படாதவாறு தடுக்கும். பிஸ்தாவை உண்பதால் ரத்த நாளங்களை விரிவடையச் செய்து இரத்த சுழற்சியை அதிகரித்து ஆண்மை குறைபாட்டை நீக்கும்.

ஷெல்பிஸ்

இதேபோன்று ஷெல்பிஸ் உண்டால், அதில் இருக்கக்கூடிய அதிக அளவிலான மினரல் ஆண்களுக்கு இருக்கக்கூடிய டெஸ்டோஸ்டீரான் அளவை அதிகரித்து, ஆண்மை குறைபாட்டை சரிசெய்யும். மேலும் ஹார்மோன் சுரக்க அதிக அளவில் பயன்பெறும்.

தர்பூசணி 

தர்பூசணி பழத்தை எடுத்துக் கொண்டாலும் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கும். ரத்த சுழற்சியை அதிகரிக்கும். எனவே ஆணுறுப்புக்கு தேவையான ரத்த ஓட்டத்தை சரி செய்வதன் மூலம் ஆண்மை குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்கிறது.

இது தவிர்த்த இரத்த சுழற்சியை அதிகரிக்கவும், இதயம் சீராக இயங்கவும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது ஒயின். மேலும் ஆப்பிள், டீ ,ரெட் ஒயின், வெங்காயம் இவை அனைத்தையும் எடுத்துக்கொண்டாலே ரத்த நாளங்களை விரவடைய செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர்த்து பொதுவாகவே  மனா ழுத்தம் இல்லாதவாறு பார்த்துக்கொண்டாலும் கண்டிப்பாக ஆண்மை குறைபாடு போன்ற பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ள முடியும்.