தினமும் காலையில் துளசி டீ குடித்து வந்தால் கிடைக்கும் ஆரோக்கியம் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மூலிகையின் ராணியாக கருதப்படும் துளசி நம்முடைய ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் நாம் ஏற்கனவே அறிந்திருப்போம். ஆயுர்வேதத்தில் கூட துளசி ஆரோக்கிய நன்மைகளின் புதையலாகக் கருதப்படுகிறது. துளசி இலைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் இருந்திருக்கிறது. எனவே காலையில் வெறும் வயிற்றில் துளசி டீ குடித்து வந்தால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒரு மாதத்திற்கு இப்படி துளசி தீயை தினமும் குடித்து வந்தால் உங்களது உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்களை நீங்களே உணரத் தொடங்குவீர்கள். இந்த பதிவில் தினமும் காலையில் துளசி டீ குடித்து வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

துளசி டீ ஆரோக்கிய நன்மைகள் :

1. நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும்

சளி இருமலால் அவதிப்படுபவர்கள் தங்களது நாளை துளசி டீயுடன் தொடங்குங்கள். ஏனெனில் துளசியில் நிறைந்துள்ள பாக்டீரியா எதிர்ப்பு, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பூஞ்சை எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு போன்றவை தொற்று நோய்களை எதிர்த்து போராடுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுபோல தினமும் காலை வெறும் வயிற்றில் துளசி டீ குடித்து வந்தால் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்படும்.

2. இதய ஆரோக்கியத்திற்கு

இதயத்தை வலுவாக வைக்க துளசி டீ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த டீயை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும். இதனால் இதயம் தொடர்பான நோய்களின் அபாயம் குறையும்.

3. குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்கவும், துளசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இதில் செரிமானத்தை மேம்படுத்தும் பண்புகள் உள்ளன.

4. வாய் துர்நாற்றம் நீங்கும் :

தினமும் துளசி டீ குடித்து வந்தால் குடல் புண், வாய் புண் உள்ளிட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும். அதுபோல வாய் துர்நாற்றம் உள்ளவர்களுக்கு இந்த டீ ரொம்பவே நல்லது. ஏனெனில் இது வாய் துர்நாற்றத்தை போக்கி, வாய் மணக்க வைக்கும். மேலும் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதற்கும் உதவுகிறது.

5. மன அழுத்தம் மற்றும் பதட்டம்

நீங்கள் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்கள் என்றால் துளசி டீயுடன் உங்களது நாளை தொடங்குங்கள். மனம் அமைதியாகும். இந்த பானம் நரம்பு மண்டலத்தைத் தளர்த்தி, மனதெளிவு அதிகரிக்கும். இதனால் நாள் முழுவதும் மன அழுத்தம் இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

6. முழங்கால் வலி

துளசியில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே நீங்கள் தினமும் துளசி டீ குடித்து வந்தால் முழங்கால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். குளிர்காலத்தில் மூட்டு வலி பிரச்சனையை பலரும் சந்திப்பார்கள் அத்தகையவர்கள் தினமும் துளசி டீயுடன் தங்களது நாளைத் தொடங்குவது நல்லது.

துளசி டீ தயாரிக்கும் முறை :

துளசி டீ தயாரிக்க முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும் இப்போது அதில் சிறிதளவு கழுவிய துளசி இலை போட்டு சுமார் ஐந்து நிமிடங்கள் குறிக்க வைக்க வேண்டும். பிறகு அதை வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடியுங்கள்.

இவராக துளசி டீயை நீங்கள் குடித்து வந்தால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் பெறலாம். குறிப்பாக குளிர்காலத்தில் துளசி டீ குடிப்பது ரொம்பவே நல்லது. ஆனாலும் உங்களுக்கு ஏதேனும் நோய் அழுது ஒவ்வாமை பிரச்சினை இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு துளசி டீ குடியுங்கள்.