நம் முன்னோர்கள் எந்த விஷயத்தை செய்தாலும், அல்லது சொன்னாலும் அதற்கு பின்னால் பல அறிவியல் காரணம் இருக்கும் என்பது நமக்கு எல்லாம் தெரிந்த ஒன்றே.. அவ்வாறு சொல்லப்பட்ட பல விஷயங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாமா..?

கோவில் இல்லா ஊரில் குடியிருக்கக்கூடாது ஆடையை பிரசாதங்களை அலட்சியம் செய்தலோ அல்லது வீண் செய்தலோ கூடாது. ஆலயங்களில் நுழைந்துவிட்டால் வீண் பேச்சுகள் மற்றும் அரட்டைகள் கூடாது இக்காலத்தில் செல்போன் பேசக்கூடாது.மனைவி கணவனை பற்றியோ அல்லது கணவன் மனைவியைப் பற்றியோ அடுத்தவரிடம் தவறாக பேசக்கூடாது

மனைவி என்ற சக்கரம் சீராக இருந்தால்தான் பயணம் வெற்றி பெறும் கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்தல் வேண்டும்.பிறர் மனைவியை மனதினால் கூட நினைக்க கூடாது. பிறர் சொத்தை  அபகரிக்கக் கூடாது. தேவையின்றி பருவப் பெண்களை தொட்டு பேச கூடாது அது நமது சகோதரியாக இருந்தாலும் கூட

எப்பொழுதும் பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தக் கூடாது.நமது கடமையை பிறர் செய்ய வைக்கக்கூடாது. தானம் தர யோசிக்கக்கூடாது. தந்தபின் வருத்த படக்கூடாது. 

மனைவியைத் தவிர பிற பெண்களிடம் உறவு வைத்தல் கூடாது.பகல் பொழுதில் கணவன் மனைவி உறவு வைத்தல் கூடாது. அதே போன்று தங்கள் குழந்தைகள் கண் முன் பெற்றோர்கள் கண்ணியமாக இருக்க வேண்டும்.