எடை குறைப்பு என்பதும், சரியான உடல் எடையை பாதுகாக்க வேண்டும் என்பதும் ஆரோக்கியத்திற்கான மிகவும் சிறந்த வழியாகும். அதிலும் 35 வயதை கடந்து விட்ட அனைவருக்கும் இது முக்கியமானதாகும். உடல் எடையை குறைப்பதற்கு 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய 10 டிப்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு உடல் எடை குறைப்பது சாத்தியம். சரியான உணவுமுறை, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் சில பழக்கவழக்கங்கள் மூலம் உடல் எடையை குறைக்கலாம். மன அழுத்தம், உணவு, உடற்பயிற்சி போன்ற பல விஷயங்களில் கவனம் செலுத்தினால் உடல் எடையை குறைக்கலாம்.

50 வயதிற்கு பிறகு உடல் எடையை குறைக்க வழிகள் :

50 வயதிற்குப் பிறகு ஆண்கள் உடல் எடை குறைக்க சில வழிகள் உள்ளன. உடல் எடை குறைப்பது சாத்தியம் என்றாலும், சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வயதில் வளர்சிதை மாற்றம் குறைவதால் உடல் எடை குறைவது கொஞ்சம் கடினமாக இருக்கலாம். தசை வலிமையும் குறைய வாய்ப்புள்ளது. ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்கலாம்.

வயது அதிகரிக்கும்போது மூட்டு வலி, சோர்வு, நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வரலாம். இவை உடல் எடை குறைப்பதற்கு தடையாக இருக்கலாம். எனவே, ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க சில எளிய வழிகளை பின்பற்றலாம். இந்த பழக்கங்களை உங்கள் வாழ்க்கையில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். நோய்களிலிருந்தும் பாதுகாப்பாக இருக்கலாம்.

உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

1. மன அழுத்தத்தை குறைப்பது முக்கியம். 50 வயதிற்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பதற்கு மன அழுத்தமும் ஒரு காரணம். மன அழுத்தத்தை குறைக்க ஆழ்ந்த சுவாசப் பயிற்சி, தியானம் போன்றவற்றை செய்யலாம். மன அழுத்தத்தைக் குறைக்க ஒரு பொழுதுபோக்கை பின்பற்றுங்கள். அல்லது யோகா செய்யுங்கள்.

2. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சில நேரங்களில் பசியாக இருப்பது போல் தோன்றும். ஆனால் உண்மையில் அது தாகமாக இருக்கலாம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். மேலும் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கலாம். ஒரு நாளைக்கு குறைந்தது 6 முதல் 7 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.

மேலும் படிக்க:இந்தியர்கள் எவ்வளவு தூரம் Walking சென்றால் ஃபிட்டாக இருக்க முடியும்?

3. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். 50 வயதிற்குப் பிறகு செரிமான அமைப்பு மெதுவாக வேலை செய்யும். இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வரலாம். உடல் எடையை குறைக்க நினைத்தால் ஓட்ஸ், முழு தானியங்கள், பழங்கள், பச்சை இலை காய்கறிகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். இதனால் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

4. புரதத்தின் அளவை அதிகரிக்கவும். உடல் எடை குறையும்போது தசை இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். எனவே புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். ஒவ்வொரு வேளை உணவிலும் குறைந்தது 20 கிராம் புரதம் இருக்க வேண்டும். பருப்பு வகைகள், டோஃபு, சீஸ், முட்டை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

5. வலிமை பயிற்சி செய்யுங்கள். உடல் எடையை குறைக்க வாரத்திற்கு 2 முதல் 3 முறை வலிமை பயிற்சி செய்வது அவசியம். தசைகளை சுறுசுறுப்பாக வைத்திருக்க வலிமை பயிற்சி செய்யுங்கள். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். மேலும் எலும்பு இழப்பையும் தவிர்க்கலாம்.

6. சரியான உணவுமுறையை பின்பற்ற வேண்டும். 50 வயதிற்குப் பிறகு உடலுக்கு அதிக கலோரிகள் தேவை. ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள், பச்சை காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உடல் எடை குறைக்கும் போது பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை, கோதுமை மற்றும் வறுத்த உணவுகளை தவிர்க்கவும்.

மேலும் படிக்க: அடடோ...காலையில் வெறும் வயிற்றில் வாக்கிங் போனா இவ்வளவு நல்லதா?

7. தினமும் நடைப்பயிற்சி செய்யுங்கள். 50 வயதிற்குப் பிறகு எல்லோராலும் கடினமான உடற்பயிற்சிகள் செய்ய முடியாது. அல்லது ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்ய முடியாது. எனவே தினமும் நடக்க வேண்டும். தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் நடக்கலாம். நீட்சி பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை செய்யலாம்.

50 வயதிற்குப் பிறகு எடை குறைப்பது கடினம் என்று நினைக்க வேண்டாம். மேலே குறிப்பிட்டுள்ள வழிகளை பின்பற்றினால் எளிதாக உடல் எடையை குறைக்கலாம். இந்த தகவலின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மைக்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு விஷயத்தையும் முயற்சிக்கும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.