வாகனம் ஓட்டும் போது தந்தைக்கு மாரடைப்பு..!  

வாகனம் ஓட்டும் போது திடீரென ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கர்நாடக மாநிலம் தும்கூரை சேர்ந்தவர் சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு புனித், நரசிம்மராஜா என்ற இரு மகன்கள் உள்ளனர். சிவகுமார் ஒரு தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஹூலியாறு பகுதியில் உள்ள ஒரு கடைக்கு டெலிவரி செய்ய சென்றுள்ளார். தற்போது கோடை விடுமுறை என்பதால் தன்னுடைய மகனையும் அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் சரியாக 12 மணியளவில் சிவகுமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வாகனம் ஓட்டும் போது அப்படியே சரிந்து உள்ளார். இதனை கண்ட மகன் புனித் என்ன செய்வது என்று தெரியாமல் சாமர்த்தியமாக எந்த ஒரு விபத்தையும் ஏற்படுத்தாத வண்ணம் ஹேண்ட் பிரேக் பயன்படுத்தி வாகனத்தை நிறுத்தி உள்ளார்.

பின்னர்தான் சிறுவனுக்கு தெரியவந்துள்ளது தன் தந்தை மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார் என்ற செய்தியே...இப்படி ஒரு சங்கடமான நிலையில் சாதுர்யமாக செயல்பட்டு யாருக்கும் எந்த பிரச்சனை ஏற்படாதவாறு விபத்தை ஏற்படுத்தாமல் வாகனத்தை கச்சிதமாக நிறுத்திய சிறுவனின் திறமையை பாராட்டிய மக்கள், அதே சமயத்தில் அவனின் நிலைமையைக் கண்டு பரிதவித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்த செய்தி ஹாட் டாப்பிக்காக தற்போது உள்ளது.