கொசு கடிப்பதால் எச்ஐவி வைரஸ் பரவும் வாய்ப்புள்ளதா? நிபுணர்கள் சொல்லும் தகவல்கள் என்ன? என்பதை இங்கு காணலாம்.
கொசுக்கள் மூலம் பல நோய்கள் பரவுகின்றன. டெங்கு, மலேரியா, ஜிகா ஆகிய வைரஸ் தொற்று நோய்கள் கூட கொசு கடியால் தான் பரவுகின்றன. அதனால் தான் வீட்டை சுத்தமாக வைக்கவும், வீட்டை சுற்றி தேவையில்லாத பொருள்கள், தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. இதனிடையே கொசுக்கள் மூலம் எச்ஐவி வைரஸ் மனிதர்களுக்கு பரவும் என ஒரு கருத்து நிலவுகிறது. இது உண்மையா என இந்தப் பதிவில் காணலாம்.
பொதுவாக கொசு ஒருவரை தாக்கும்போது அந்த நபரின் உடலில் உள்ள இரத்தத்தைத் தான் உறிஞ்சும். ஆனால் அவரின் இரத்தத்தில் இருக்கும் தன்மைகளை கடத்தாது என நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படியென்றால் நோய்க்கிருமி பரவாதா? தனியொரு நபரின் இரத்தத்தில் உள்ள கிருமிகளை மற்ற நபருக்கு கடத்தும் பண்புகளை கொசுக்களுடைய உடல் கொண்டிருக்காதாம்.
எச்ஐவி வைரஸ் தொற்று உள்ள ஒருவரின் இரத்தத்தை உறிஞ்சிய கொசு, இன்னொருவரை கடித்தால் உடனடியாக அந்த இரத்தம் மூலம் தொற்றை பரவ செய்யாது. கொசு கடிக்கும் நபரின் உடலில் இரத்தத்தை வெளியிடுவதை விட உமிழ்நீரை தான் கொசு அதிகம் சுரக்கும். எச்ஐவி-யை கடத்தக் கூடிய கொள்ளளவு கொசுக்களுக்கு கிடையாது.
கொசுக்கடி வழியாக ஒருவருக்கு எச்.ஐ.வி வைரஸ் பரவ குறைந்ததபட்சம் 10 லட்சம் கொசுக்கடி தேவை என நிபுணர்கள் தெரிவிக்கிறனர். அப்படி கடித்தால் தான் ஒருவருக்கு சுமார் 1 யூனிட் அளவு எச்ஐவி செலுத்த முடியும்.
தாம்பத்தியம், விந்து, இரத்த மாற்றம், தாய்ப்பால், பிறப்புறுப்பு திரவங்கள் ஆகியவற்றின் நேரடி தொடர்பு காரணமாக எச்ஐவி பரவலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தவிர மென்மையான தசை துவாரங்கள் வழி பரவும். அதாவது வாய், மூக்கு, பிறப்புறுப்பு பகுதிகள் மூலமும், வெட்டு காயங்கள் துவாரங்கள் மூலமும் பரவலாம். உரிய மருத்துவ வழிகாட்டல் மூலம் எச்ஐவி பாதித்த தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவாமல் பிரசவிக்க முடியும்.
இந்த நோய் பரவலை தடுக்க உரிய பாதுகாப்பு முறைகள் மூலம் தாம்பத்தியம் வைத்து கொள்ள வேண்டும். ஏற்கனவே நோய் பாதித்த நபரிடம் நேரடியாக தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் நோயில் இருந்து காக்கும்.
