மழை காலத்தில் கொசுக்களை விரட்டும் 5 செடிகள்! வீட்டுக்குள் ஒரு கொசு வராது!!
மழைக்காலத்தில் வீட்டில் கொசுக்கள் தொல்லை அதிகமாக இருந்தால் இந்த 5 செடிகளை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் ஒரு கொசு கூட வராது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Indoor Plants Which Keep Mosquitoes Away During The Rainy Season
மழைக்காலம் ஆரம்பமாகிவிட்டாலே கொசுக்களின் தொல்லையும் வந்துவிடும். ஏனெனில் மழையின் காரணமாக தேங்கியிருக்கும் நீரால் கொசுக்கள் அதில் தங்கி காய்ச்சல், டெங்கு, மலேரியா, வயிற்றுப்போக்கு போன்ற அபாகரமான நோய்களை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து செடிகளை மட்டும் வீட்டில் வளருங்கள். ஒரு கொசு கூட வீட்டிற்குள் வராது. அதுமட்டுமின்றி, அந்த செடிகள் கொசுக்களை வீட்டிலிருந்து விரட்டுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளையும் வழங்கும். அவை என்னென்ன செடிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
துளசி:
பொதுவாக துளசி எல்லார் வீட்டிலும் காணப்படும். இது பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. துளசியிலிருந்து வரும் வாசனை கொசுக்களை வீட்டில் இருந்து விரட்டி அடிக்கும். எனவே ஒரு துளசி செடியை உங்கள் வீட்டின் ஜன்னல் அருகே அல்லது பால்கனியில் வைத்தால் ஒரு கொசு கூட வீட்டிற்குள் நுழையாது.
புதினா:
வழக்கமாக சமைக்கும் உணவில் தான் புதினாவை பயன்படுத்துவோம். ஆனால் இது கொசுக்களையும் விரட்டியடிக்கும் தெரியுமா? ஆம், புதினாவிலிருந்து வரும் கடுமையான வாசனை கொசுக்களால் தாங்க முடியாது. எனவே ஒரு புதினா செடியை உங்களது வீட்டில் ஒரு மூலையில் வைப்பது மிகவும் நன்மை பயக்கும்.
எலுமிச்சை புல்:
எலுமிச்சைப்புல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இத்தகைய சூழ்நிலையில் அதன் இலைகளை கிழித்து வீட்டை சுற்றி முழுவதும் பரப்பினால் ஒரு கொசுக்கள் கூட வீட்டிற்குள் வராது.
சாமந்தி பூ:
சாமந்தி பூவிலிருந்து வரும் வாசனை கொசுக்களை விரட்டும் என்று பலருக்கும் தெரியாது. பலர் தங்களது வீட்டின் பின்புறம் அல்லது பால்கனியில் இந்த செடியை வளர்ப்பார்கள். நீங்கள் விரும்பினால் இந்த செடியை வீட்டிற்குள் வளர்த்தால் அதன் வாசனை கொசுக்களை விரட்டியடிக்கும்.
சிட்ரோனெல்லா:
சிட்ரோனெல்லா செடியானது இயற்கையாகவே கொசுக்களை விரட்டியடிக்க உதவும் என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த செடியை உங்கள் வீட்டில் வைத்திருந்தால் ஒரு கொசுக்கள் கூட வீட்டிற்குள் வராது. அதுபோல மழைக்கால தொற்று நோய்களை தவிர்க்க இந்த செடியை வீட்டில் ஒரு மூலையில் வைக்கவும்.