Mosquitoes: பொதுவாக தேங்கி நிற்கும் சாக்கடை, கால்வாய் போன்ற இடங்களில் கொசுக்கள் அதிகம் பரவும். சில எளிய இயற்கையான வழிமுறைகள் பயன்படுத்தி கொசுக்களை விரட்டலாம்.
பொதுவாக தேங்கி நிற்கும் சாக்கடை, கால்வாய் போன்ற இடங்களில் கொசுக்கள் அதிகம் பரவும். சில எளிய இயற்கையான வழிமுறைகள் பயன்படுத்தி கொசுக்களை விரட்டலாம்.
பருவ காலங்கள் மாறும்போது கூடவே தொற்று நோய் தாக்கமும் வந்துவிடும். .அதுமட்டுமின்றி, இவை பல்வேறு உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பகல் முழுவதும் வேலை பார்த்து விட்டு, களைப்பாக வந்து இரவில் தூங்கும் நேரம், கொசு நம்மை பாடாய் படுத்தும். எனவே, இந்த கொசுக்களின் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை கொசுக்கள் இல்லாமல் வைத்திருக்கவும் சில எளிய இயற்கையான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுவாக தேங்கி நிற்கும் சாக்கடை, கால்வாய் போன்ற இடங்களில் கொசுக்கள் அதிகம் பரவும். இதனால் உங்களது வீட்டின் பக்கத்தில், இந்த மாதிரியான நீர் தேக்கங்கள் இல்லாமல் பார்த்தக்கொள்ளுங்கள்.
வீட்டில் வளர்க்கப்படும் செடி மற்றும் பூந்தொட்டிகளை சுத்தமாக பராமரிக்கவும். மிளகு எண்ணெய்’இயற்கை பூச்சிக்கொல்லியாகவும், கொசுவை விரட்டியடிக்கவும் பயன்படுகிறது. இதில் எலுமிச்சையுடன் மிளகு எண்ணெய் சேர்த்து தடவும்போது கொசு கடியில் இருந்து தப்பிக்கலாம்.
சமையலுக்கு பயன்படுத்தப்படும் லவங்கப்பட்டை வீட்டில் சொசுவை விரட்ட முக்கிய பயனை தருகிறது. லவங்கப்பட்டை எண்ணெய்யுடன் சிறிதளது தண்ணீர் கலந்து தடவினால் கொசுக்கடியில் இருந்து நிம்மதியாக இருக்கலாம்.
துளசி சாறு:

தேங்கி நிற்கும் நீர்நிலைகளில் செறிவூட்டப்பட்ட துளசி சாற்றை தெளிப்பது, கொசுக்களை இனபெருக்கம் செய்யவிடாமல் தடுக்கிறது. ஏனெனில், துளசி சாறு வலுவான லார்விசைல் பண்புகளைக் கொண்டுள்ளது. துளசி, லாவெண்டர், லெமன்கிராஸ், சாமந்தி மற்றும் புதினா போன்ற தாவரங்களை வளர்ப்பது பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் அவை இயற்கையான மற்றும் பயனுள்ள கொசு விரட்டிகளாக செயல்படுகின்றன.
கற்பூரம்:
கற்பூரம் கொசுக்களை விரட்டும் பண்பு கொண்டது. அறைக்குள் கற்பூரத்தை ஏற்றிவிட்டு அறை கதவை மூடிவிட்டு அரைமணி நேரம் கழித்து திறந்தால், அரையில் ஒரு கொசுகூட இருக்காது.

காபிக்கொட்டை:
காபிக்கொட்டை கழிவுகளும் கொசுவை விரட்டும் திறன்கொண்டது. தேங்கி கிடக்கும் கழிவு நீரில் காபிக்கொட்டை கழிவுகளை தூவிவிட்டால், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொசு முட்டைகள் இறந்துவிடும்.
பூண்டு:
கொசுக்களை விரட்டுவதில் பூண்டுக்கு முக்கிய பங்குண்டு. பூண்டு துண்டுகளை நசுக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை ஆறவைத்து ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி அறை முழுவதும் தெளித்தால் கொசு பறந்துவிடும். பூண்டுக்கு மாற்றாக பூண்டு எண்ணெயுடன் ஐந்து மடங்கு நீர் கலந்து பஞ்சை நனைத்து ஆங்காங்கே போட்டு விட்டாலும் அதன் வாசனைக்கு கொசுக்கள் அண்டாது.
