Rid of mosquitoes: உங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை கொசுக்கள் இல்லாமல் வைத்திருக்கவும் சில எளிய இயற்கையான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

கொசுவை விரட்டுவதற்கு பால சாதனங்கள், கடைகளில் குவிந்துள்ளன. இருப்பினும், கொசு நம்மிடம் இருந்து டிமிக்கி கொடுத்து மூளை முடுக்குகளில் மறைந்து விடுகிறது. பகல் முழுவதும் வேலை பார்த்து விட்டு, களைப்பாக வந்து இரவில் தூங்கும் நேரம், கொசு நம்மை பாடாய் படுத்தும்.

அதுமட்டுமின்றி, இவை பல்வேறு உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.எனவே, இந்த கொசுக்களின் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை கொசுக்கள் இல்லாமல் வைத்திருக்கவும் சில எளிய இயற்கையான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

குப்பைகள் மற்றும் தண்ணீர் தேங்குவதை தடுப்பது:

 உங்கள் வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அருகில் குப்பைகள் மற்றும் தண்ணீர் தேங்குவதை அனுமதிக்கக்கூடாது. ஏனெனில், இங்கு தான் அதிகப்படியான கொசுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றனர்.

பூண்டு வாசனை:

 பூண்டு வாசனையை கொசுக்கள் விரும்பாது. எனவே, பூண்டை நசுக்கி சாறு கீழே போகாமல் தண்ணீரில் விட்டு கொதிக்க வைத்து, அதை ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு ஸ்ப்ரே செய்யலாம். பூண்டுக்கு மாற்றாக பூண்டு எண்ணெயுடன் ஐந்து மடங்கு நீர் கலந்து பஞ்சை நனைத்து ஆங்காங்கே போட்டு விட்டாலும் அதன் வாசனைக்கு கொசுக்கள் அண்டாது. 

துளசி சாறு:

தேங்கி நிற்கும் நீர்நிலைகளில் செறிவூட்டப்பட்ட துளசி சாற்றை தெளிப்பது, கொசுக்களை இனபெருக்கம் செய்யவிடாமல் தடுக்கிறது. ஏனெனில், துளசி சாறு வலுவான லார்விசைல் பண்புகளைக் கொண்டுள்ளது. துளசி, லாவெண்டர், லெமன்கிராஸ், சாமந்தி மற்றும் புதினா போன்ற தாவரங்களை வளர்ப்பது பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் அவை இயற்கையான மற்றும் பயனுள்ள கொசு விரட்டிகளாக செயல்படுகின்றன.

வேப்ப இலைகள்:

வேப்ப இலைகள் ஒரு சிறந்த கொசு விரட்டியாகும், எனவே சுற்றுப்புறங்களில் வேப்ப மரங்களை நடுவது நல்லது. மேலும், மஞ்சள் வேர்களை, வேப்ப இலைகளுடன் சேர்த்து புகைபிடிப்பது கொசுக்களை அகற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

 எலுமிச்சை:

நல்ல சாறு நிறைந்த எலுமிச்சையை பாதியாக வெட்டி கொள்ளவும். அதில் கிராம்புகளை நட்டு வைக்க வேண்டும். எலுமிச்சையின் வாசமும், கிராம்பின் வாசமும் கொசுக்களிடமிருந்து நம்மை விலக்கி வைக்கும்.

மிளகு குச்சிகள்: 

மிளகு குச்சிகளை எரிப்பது, கொசுக்கள் வராமல் தடுக்கிறது. புகைபிடிக்கும் சாம்பிராணி போன்றவை, கொசுக்களை விரட்டும் அதே வேளையில் அதன் நறுமணம் ஒரு இனிமையான சூழலை உருவாக்குகிறது.

இதனை தவிர்த்து, வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், சந்தன எண்ணெய், வேப்ப இலை விழுது, துளசி இலை பேஸ்ட் போன்றவற்றை உடலில் தேய்த்து கொள்வது கொசுக்களை விரட்டும்.

மேலும் படிக்க..Coconut water: தெய்வத்திற்கு தேங்காய் உடைக்கும் போது...இனி தேங்காய் தண்ணீரை இந்த முறைகளில் பயன்படுத்துங்கள்..!