MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வீட்டில் கொசு தொல்லை தாங்க முடியலையா? 'இப்படி' செஞ்சு பாருங்க இனி வரவே வராது!

வீட்டில் கொசு தொல்லை தாங்க முடியலையா? 'இப்படி' செஞ்சு பாருங்க இனி வரவே வராது!

Natural Mosquito Repellents : கொசுக்களை விரட்ட வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தலாம். அவை என்னென்ன, அதை எப்படி பயன்படுத்துவது என்று இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Feb 06 2025, 09:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வீட்டில் கொசு தொல்லை தாங்க முடியலையா? 'இப்படி' செஞ்சு பாருங்க இனி வரவே வராது!

வீட்டில் கொசு தொல்லை தாங்க முடியலையா? 'இப்படி' செஞ்சு பாருங்க இனி வரவே வராது!

சாதாரண நாட்களிலே வீட்டில் கொசுக்களின் தொல்லை அதிகமாகவே இருக்கும். அப்படியானால் மழை, குளிர் காலங்களில் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு மோசமாக இருக்கும்.  இதன் விளைவாக மலேரியா, சிக்கன் குனியா, டெங்கு போன்ற ஆபத்தான தொற்று நோய்கள் தாக்கும். ஏன் சில சமயங்களில் உயிர் கூட போகும். அதுமட்டுமின்றி, கொசுக்களின் தொல்லையால் இரவு நிம்மதியாக கூட தூங்க முடியாமல் போகிறது. இதனால்தான் பலர் கொசுக்கடியிலிருந்து தப்பிக்க கொசுபத்தி, கொசு விரட்டி போன்ற ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இவை கொசுக்களில் கொல்லும் என்றாலும், அவை நம்முடைய ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். எனவே கொசுக்களை இயற்கை முறையில் தான் விரட்ட வேண்டும். அதற்கு வீட்டில் இருக்கும் சில பொருட்களை மட்டும் பயன்படுத்தினால் போதும். அவை என்னென்ன, அதை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
கற்பூரம் :

கற்பூரம் :

கொசுக்களை விரட்ட கொசுபத்தியை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு பதிலாக, மாலையில் உங்கள் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு கற்பூரத்துடன் வேப்பிலை சேர்த்து பற்றவைத்து அவற்றிலிருந்து வரும் புகையை வீடு முழுவதும் பரப்பவும்.  இப்படி செய்தால் கொசுக்கள் வீட்டிற்குள் மீண்டும் வராமல் தடுக்கப்படும்.

36
சாம்பிராணி :

சாம்பிராணி :

சாம்பிராணி வீட்டிற்கு நறுமணத்தை தருவது மட்டுமல்லாமல் கொசுக்களை விரட்டவும் உதவுகிறது. எனவே உங்கள் வீட்டில் கொசுக்கள் தொல்லை அதிகமாக இருந்தால் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு, சாம்பிராணியை புகையை வீடு முழுவதும் பரவும் படி செய்யுங்கள். இப்படி செய்தால் வீடு நறுமணமாக இருப்பது மட்டுமல்லாமல், கொசுக்கள் தொல்லையும் இருக்காது.

46
பூண்டு :

பூண்டு :

பூண்டு சமையலுக்கு மட்டும் இன்றி கொசுக்களை விரட்டவும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றிலிருந்து வரும் வாசனை கொசுக்களை உங்கள் வீட்டில் இருந்து விரட்டி அடிக்கும். இதற்கு 4-5 பூண்டு பற்களில் நன்றாக நசுக்கி அதனுடன் சிறிதளவு எண்ணெய் மற்றும் கற்பூரத்தை சேர்த்து ஏற்றினால் அவற்றின் புகையானது வீடு முழுவதும் பரவும். இதனால் கொசுக்கள் செத்து மடியும். 

இதையும் படிங்க:  மழைக்காலத்தில் கொசுக்கள் தொல்லையா? அப்ப 'பூண்டை' இப்படி யூஸ் பண்ணுங்க..

56
கற்றாழை :

கற்றாழை :

உங்களது வீட்டை சுற்றி துளசி, வேம்பு, கற்றாழை போன்ற செடிகள் இருந்தால் கொசுக்கள் வராது. அதுமட்டுமின்றி கற்றாழை கொசு கடிக்க மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. கொசு கடித்த இடத்தில் கற்றாழை ஜெல்லை தடவினால் உடனே நிவாரணம் கிடைக்கும். அதுபோல துளசி இலை அல்லது வேப்பிலையை பேஸ்ட் போல் அரைத்து அதை கொசு கடித்த இடத்தில் தடவினால் சொறி, அரிப்பு ஏற்படாது.

இதையும் படிங்க:  இந்த ஒரே ஒரு பொருளை வைத்து வீட்டில் உள்ள ஈக்கள், கொசுக்களை விரட்டலாம்; எப்படி தெரியுமா?

66
மிளகுக்கீரை எண்ணெய் :

மிளகுக்கீரை எண்ணெய் :

வீட்டிலிருந்து கொசுக்களை விரட்டியடிக்க மிளகுகளை எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு நீங்கள் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் கலந்து அதனுடன் சில துளிகள் இந்த எண்ணெயை சேர்த்து நன்றாக கலந்து அதை வீடு முழுவதும் தெளித்தால் கொசுக்கள் அவற்றின் வாசனை தாங்க முடியாமல் வீட்டில் இருந்து ஓடிவிடும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Travel : வெறும் ரூ.2,000 செலவில் 6 மாநிலங்கள்! எப்படி டிராவல் செய்கிறார் இந்தப் பெண்? ரகசியம் இதுதான்!
Recommended image2
Water Taps: துருப்பிடித்த தண்ணி குழாய்கள் புதுசு போல ஜொலிக்கணுமா? 'இந்த' 2 சமையலறை பொருட்கள் போதும்!
Recommended image3
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved