இரவில் ப்ரா அணிந்து தூங்குறீங்களா? மறந்தும் அந்த தப்ப இனி பண்ணாதீங்க!!
Sleeping in Bra : இரவில் ப்ரா அணிந்து தூங்குவதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பெண்ணும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைக்க சரியான அளவில் ப்ரா அணிவது மிகவும் அவசியம். ப்ரா மார்பகத்தை அழகாக காட்டுவது மட்டுமின்றி, ஆளுமை தோற்றத்தையும் மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. பொதுவாக பெண்கள் பகல் முழுவதும் ப்ரா அணிந்து இருப்பார்கள். ஆனால், இரவில் ப்ரா அணிந்து தூங்கலாமா? அது நல்லதா? என்ற குழப்பம் பெண்களுக்கு உண்டு.
ஏனெனில், சில பெண்கள் இரவில் ப்ரா அணிந்து தூங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று உணர்ந்து அவர்கள் ப்ரா அணிந்து தூங்க விரும்புகிறார்கள். இன்னும் சில பெண்களோ இரவில் ப்ரா அணிந்து தூங்கினால் அசெளகரியமாக உணர்வதால் அவர்கள் இரவில் ப்ரா அணிய விரும்புவதில்லை. ஆனால் உண்மையில் இரவில் ப்ரா அணிந்து
தூங்குவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். எனவே நீங்களும் இரவில் தூங்கும் போது பிரா அணிந்து தான் தூங்குவீங்களா? ஏன் இரவில் ப்ரா அணிந்து தூங்கக் கூடாது என்பதற்கான காரணங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
இரவில் ப்ரா அணிந்து தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்:
தடிப்புகள் & கரும்புள்ளிகள்:
பகல் முழுவதும் இறுக்கமான ப்ரா அணிந்த பிறகு, இரவில் அதை கழற்றி விட்டு தூங்குவது தான் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது இல்லையெனில், மார்பின் அடியில் எரிச்சல், அரிப்பு, தடிப்புகள் ஏற்படும். ஏனெனில் அந்த பகுதியில் வியர்வை தங்கும். மேலும் அந்த இடம் ரொம்பவே உணர்திறன் உடையது. இத்தகைய சூழ்நிலையில், ப்ராவை கழற்றிவிட்டு இரவில் தூங்கவில்லை என்றால் காலப்போக்கில் தடிப்புகள் கருமையாக புள்ளியாக மாறிவிடும்.
இதையும் படிங்க: பிரா வாங்க போறீங்களா? அப்ப முதல்ல இந்த விஷயங்களை தெரிஞ்சிகோங்க..
ஒவ்வாமை:
நீங்கள் நாள் முழுவதும் ப்ரா அணிந்து இருப்பதால் மார்பகங்களை சுற்றி வியர்வை அப்படியே இருக்கும். இதுபோன்று சூழ்நிலையில் இரவிலும் நீங்கள் அதே ப்ராவை அணிந்தால் உங்களது சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதாவது, ப்ரா அணிவதால் அந்த இடத்தில் சரியான காற்று கிடைக்காமல் ஈரப்பதம் அப்படியே இருப்பதால் அந்தப் பகுதியில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியின் அபாயம் இரட்டிப்பாகும். இதன் காரணமாக சொறி, அலர்ஜி போன்ற ஒவ்வாமை பிரச்சனைகள் சந்திக்க நேரிடும்.
இரத்த ஓட்டம் தடுக்கப்படும்:
இரவில் இறுக்கமான ப்ரா அணிந்து தூங்குவதால் மார்பகத்தை சுற்றி உள்ள பகுதியில் ரத்த ஓட்டம் சரியாக இருக்காது. முக்கியமாக இருக்கமான ப்ரா அணிந்து இரவில் தூங்கும் போது மார்பில் அழுத்தம் அதிகரிக்கும். இதன் காரணமாக ரத்த நாளங்கள் சுருங்கி, அந்த பகுதியில் ரத்த ஓட்டமும் குறைய ஆரம்பிக்கும். இதனால் மார்பகத்தில் வலி, வீக்கம், உணர்வினை போன்ற பிரச்சனையை நீங்கள் அனுபவிக்கலாம்.
இதையும் படிங்க: தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்களின் கவனத்திற்கு! "ப்ரா" தொடர்பான இந்த தவறுகளை ஒருபோதும் செய்யாதீங்க..!!
தூக்கமின்மை:
நல்ல தூக்கம் வருவதற்கு படுக்கை மட்டுமல்ல நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளும் வசதியாக இருக்க வேண்டும். அந்த வகையில் இறுக்கமான ப்ரா அணிந்து தூங்கினால் மார்பு பகுதியில் காற்று செல்வது தடுக்கப்படும். இதனால் அந்தப் பகுதியில் அதிகப்படியான வியர்வை ஏற்படும். இதன் காரணமாக உங்களது தூக்கம் பாதிக்கப்படும். நீங்கள் இரவு சரியாக தூங்கவில்லை என்றால் காலையில் சோர்வாக உணர்வீர்கள். இரவில் ப்ரா அணிந்து தூங்கக்கூடாது என்று சொல்வதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
மார்பக புற்றுநோய்:
இரவில் ப்ரா அணிந்து தூங்கினால் மார்பகங்கள் மோசமாக பாதிக்கப்படும் மற்றும் ரத்த ஓட்டமும் சீராக ஓடாது. அதுமட்டுமின்றி தூக்கமும் பாதிக்கப்படும். முக்கியமாக மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன. அதுவே நீங்கள் இரவு ப்ரா அணிந்து தூங்கவில்லை என்றால், மார்பகங்களின் தசைகளை தளர்த்து, ரத்த ஓட்டமும் சீராக நடக்கும் மற்றும் உங்களது தூக்கத்தின் தரமும் மேம்படும்.