தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்களின் கவனத்திற்கு! "ப்ரா" தொடர்பான இந்த தவறுகளை ஒருபோதும் செய்யாதீங்க..!!
பாலூட்டும் தாய்மார்கள் தாங்கள் அணியும் பிராவில் கவனமாக இருக்க வேண்டும். இது தொடர்பான சில குறிப்புகள் இதோ..
பொதுவாகவே, கர்ப்பிணிகளின் வாழ்க்கை முறை சாதாரண பெண்களிடமிருந்து வேறுபட்டது. இந்த விஷயத்தில் அவர்கள் ஒவ்வொரு அடியிலும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, குழந்தை பால் கொடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைக்கு தொற்று ஏற்படலாம். எனவே உடல் தூய்மையைப் பேணுவதும், உடுத்தும் ஆடைகளில் கவனம் செலுத்துவதும் நல்லது. பிரசவத்திற்குப் பிறகு, மகளிர் மருத்துவ நிபுணர்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு ஆடைகளை அணிய அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் இது குழந்தை வளர்ப்பிற்கு உதவுகிறது. தற்போது, இந்த கட்டுரையில், பெண்கள் தாங்கள் அணியும் ப்ராவை எவ்வாறு கவனித்துக் கொள்ள வேண்டும், இதில் என்ன தவறுகள் செய்யக்கூடாது என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
நல்ல பிராவை போட வேண்டும்: பொதுவாக, பல பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது feeding braக்கு பதில், தினமும் போடும் ப்ராவை அணிந்து, குழந்தைக்கு பாலூட்டுகிறார்கள். feeding bra வாங்குவது வெறும் பண விரயம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் ஒரு சிந்தனை பயனுள்ளதாக இருக்கும். அதாவது உங்கள் மார்பகங்கள் பெரிதாக இருக்கும். இந்நிலையில் சிறிய அளவிலான பழைய பிராவை நீண்ட நேரம் அணிவது ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். ஏனென்றால் அது மிகவும் இறுக்கமாக உணர்கிறது. எனவே இந்த சமயத்தில் feeding bra பயன்படுத்துவது நல்லது.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கீங்களா? இந்த விஷயங்களை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க!
பிரா அவசியம் போட வேண்டும்: புதிதாகப் பிறந்த குழந்தை ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் பால் குடிக்க விரும்புவது இயல்பானது. இதனாலேயே பல பெண்கள் ப்ரா போட விரும்புவதில்லை. ஆனால் பெண்கள் ப்ரா அணியாமல் இருந்தால், மார்பகங்கள் தொங்க வாய்ப்பு அதிகம். மேலும் இதனால் முதுகு வலியும் கூட வரும். எனவே, பிரா கண்டிப்பாக போட வேண்டும்.
இதையும் படிங்க: தாய்ப்பால் கொடுக்கும் பெண்களே!..தவறுதலாக கூட இவற்றை சாப்பிடாதீங்க...குழந்தைக்கு ஆபத்து.. ஜாக்கிரதை..!!
அடிக்கடி பிராவை மாற்ற வேண்டும்: குழந்தை பெற்ற பிறகு பாலூட்டும் தாய்க்கு உடல் சுத்தம் மிகவும் முக்கியம். எனவே ஒரே பிராவை நீண்ட நேரம் அணிந்து அதை மாற்றாமல் இருப்பதினால் மார்பக தொற்று, பாக்டீரியா வளர்ச்சி மற்றும் நிப்பிள் பகுதியில் துர்நாற்றம் ஏற்படும். எனவே, கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது ப்ராவை மாற்ற வேண்டும்.
சரியான அளவு பிரா போட வேண்டும்: இது சற்று கடினமான பணி. இருந்தாலும், பாலூட்டும் தாய்மார்கள் இதை அவசியம் பின்பற்ற வேண்டும். அதனால்தான் feeding bra போடுமாறு மகளிர் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதுபோல் பிராவை ரொம்பவும் இறுக்கமாக போடாமல் இருப்பது நல்லது. மேலும் பெரிய சைஸ் பிரா போட்டால் அங்கு எரிச்சல் அதிகரிக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
காட்டன் மெட்டீரியல் பிரா அணிவது நல்லது: நிச்சயமாக, பிராவில் பல்வேறு மெட்டீரியல்கள் உள்ளன. ஆனால் பாலூட்டும் பெண்கள் காட்டன் மெட்டீரியலால் செய்யப்பட்ட பிராவை அணிய வேண்டும். இதனால் உடல் வெப்பநிலை சீராகி எரிச்சல் நீங்கும்.