தாய்ப்பால் கொடுக்கும் பெண்களே!..தவறுதலாக கூட இவற்றை சாப்பிடாதீங்க...குழந்தைக்கு ஆபத்து.. ஜாக்கிரதை..!!
தாய்பால் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது. அத்தகைய சூழ்நிலையில் தாய்மார்கள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் போது தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு பெண் தாயான பிறகு பல பொறுப்புகள் அவளுக்கு உண்டு. அதுவும் குறிப்பாக குழந்தைக்கு உணவளிப்பது. ஒரு குழந்தை பிறந்து குறைந்தது ஆறு மாதங்களுக்கு தாயின் பால் மட்டுமே உண்ண வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, இந்த காலகட்டத்தில் பெண்கள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதன்படி தாய்ப்பால் கொடுக்கும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகளைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் அவற்றை சாப்பிட்டால் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
தாய்ப்பால் கொடுக்கும் போது பெண்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் இங்கே..
டீ - காபி: தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காஃபின் உள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும். டீ, காபி மற்றும் குளிர் பானங்களில் அதிகளவு காஃபின் இருக்கும். எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை நீங்கள் காபி டீ காபி குடிக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு நாளைக்கு 5 கப்புக்கு மேல் குடிக்க கூடாது. அளவுக்கு அதிகமாக குடித்தால் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதனால் இவை குழந்தைக்கு அதிக அழுகை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், குழந்தை இரவு முழுவதும் தூங்காமல் இருக்கும்.
மதுபானம் : ஒவ்வொரு பாலூட்டும் தாயும் இதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இது குழந்தையின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக புதிய தாய்மார்கள் இதிலிருந்து விளக்கி இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: தாய்ப்பால் அதிகமாக சுரக்க பெண்கள் பால் ரொம்ப குடிக்க வேண்டுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு எலுமிச்சை நெல்லிக்காய் போன்ற புளிப்பு பழங்கள் சாப்பிடுவதை குழந்தையின் வயிற்றில் எரிச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் டயபர் சொறிவு போன்றவை உண்டாக்கும். இருப்பினும் இவற்றை முற்றிலுமாக அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. மாறாக குழந்தையிடம் ஏதேனும் மாற்றத்தை நீங்கள் கண்டால் அதைப் பற்றி மருத்துவரை அணுகவும்.
மீன்: கடல் உணவுகள் புரதம் மற்றும் ஒமேகா-3கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். இருப்பினும் பெரும்பாலான கடல் உணவுகளில் பாதரசம் அல்லது பிற அசுத்தங்கள் உள்ளன. அத்தகைய சூழ்நிலை தாய்ப்பால் மூலம் அதிக அளவு பாதரசம் வெளிப்படுவது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கிறது.
இதையும் படிங்க: மார்பக புற்றுநோய் சிகிச்சைக்குப் பின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியுமா? அது நல்லதா?
டிரான்ஸ் கொழுப்பு: கேக்குகள், கிரீம் பீட்சா மற்றும் பர்கர் போன்ற உணவுப் பொருட்களின் கொழுப்புகள் அதிகம் நிறைந்தது. சில உணவுப் பொருட்களில் ட்ரான்ஸ் கொடுப்பின் அளவு அதிகரிக்கும் போது டிஹெச்ஏ அளவு குறைகிறது. இது குழந்தையின் மூளை வளர்ச்சியில் எதிர்மறையான விளைவு ஏற்படுகிறது. எனவே, இதை தவிர்ப்பது நல்லது.