பிரா வாங்க போறீங்களா? அப்ப முதல்ல இந்த விஷயங்களை தெரிஞ்சிகோங்க..
Tips to a Perfect Fitting Bra : உங்கள் மார்பகங்கள் அளவுக்கு ஏற்றவாறு சரியான பிரா தேர்வு செய்வது எப்படி மற்றும் அதற்காக நீங்க அளவு எடுக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன அவற்றை அறிந்து கொள்ளுங்கள்.
பெண்கள் பிரா அணியும் போது அவர்கள் சரியான அளவில் போடுவது மிகவும் முக்கியம். ஒருவேளை சரியான அளவில் பிரா போடவில்லை என்றால், பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உதாரணமாக, மார்பகங்கள் தளர்ந்து போய் விடும். எனவே, நீங்கள் உங்கள் மார்பகங்கள் அளவுக்கு ஏற்றவாறு சரியான பிரா தேர்வு செய்வது எப்படி மற்றும் அதற்காக நீங்க அளவு எடுக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன அவற்றை அறிந்து கொள்ளுங்கள்.
பிரா: நீங்கள் இந்த பிரா வாங்கும்போது உங்கள் அளவுக்கு இருக்கக் கூடிய சரியான பிரா வாங்கி பயன்படுத்துங்கள். இந்த மாதிரியான பிரா உங்கள் மார்பகத்துடன் ஒட்டி இருக்கும். மேலும், உங்களது மார்பகம் தளர்ந்து போகவும் வாய்ப்பு இல்லை. ஒருவேளை நீங்கள் நான் பேடி பிரா பயன்படுத்தினால் அது அவ்வளவு துல்லியமாக இருக்காது.
நல்ல டேப்: நீங்கள் அளவெடுக்க பயன்படுத்தும் டேப் நல்ல முறையில் இருக்க வேண்டும் ஒருவேளை அது பழையதாக இருந்தால் அது கொஞ்சம் தளர்வடைந்து, அதில் உள்ள இறுக்கம் குறைந்து போய் இருப்பதால் அதை வைத்து அளவெடுத்தால் நீங்கள் சரியான அளவெடுக்க முடியாது. பிராவில் அளவில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இதனால் உங்களால் ஃபிட்டான பிரா வாங்க முடியாது. எனவே நல்ல டேப்பை பயன்படுத்துங்கள்.
மார்ப்பு அளவு: பலர் மார்ப்புளவை சுற்றி அளவெடுக்கும் போது ஃப்பிட்டாக இருக்க வேண்டும் என்று நினைத்து டைட்டாக அளவு எடுப்பார்கள். ஆனால் இப்படி அளவெடுப்பது தவறு. மாறாக, நீங்கள் ஏற்கனவே அணிந்திருக்கும் பிராவின் மேல் புறத்தைச் சுற்றி டேப் வைத்து சுற்றி உங்களது மார்பை அளவெடுக்க வேண்டும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பிரா அளவு: நீங்கள் வாங்கும் பிரா உங்களுக்கு சரியானதாக இருக்கும் படி வாங்குங்கள். குறிப்பாக, அளவில் கொஞ்சம் கூடவோ அல்லது குறையவோ கூடாது. சரியான அளவில் உங்களுக்கு சிட்டாக இருக்கக்கூடிய அளவில் பிரா வாங்குங்கள். எனவே, ஒரு முறைக்கு இருமுறை நன்றாக அளந்து பார்த்து வாங்குங்கள்
பிரா மாடல்: பொதுவாகவே, பிராக்களில் நிறைய வகைகள் உள்ளது. உதாரணமாக, Padded Bra, Non Padded Bra, ட்ராப்புடன் இருப்பது, ஸ்டாப் இல்லாமல் இருப்பது, புல் கவர், ஸ்போர்ட்ஸ் போன்றவற்றை ஆகும். ஆனால், இவை எல்லாவற்றையும் ஒரு முறை ட்ரை பண்ணி பார்க்கலாம் என்று வாங்காமல், உங்களுடைய உடல் வாகுக்கு ஏற்றவாறு மற்றும் மார்பகத்தின் சரியான அளவில் நல்ல டிசைன் பிரா வாங்கி பயன்படுத்துங்கள்.