காலை உணவை தவிர்த்தால் வரக்கூடிய பயங்கர பிரச்சனை ..! உஷார் மக்களே..! 

மாறிவரும் கலாச்சாரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் எத்தனையோ மாற்றங்கள் நம் வாழ்க்கையில் ஏற்படுகிறது. ஆனாலும் உணவு பழக்க வழக்கங்களில் முறையாக பேணிக் காப்பது மிகவும் சிறந்தது. முன்பெல்லாம் சத்தான உணவுகளும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளும் நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்து வந்தனர். அதனால் தான் கலப்படம் இல்லாத உணவுப் பொருட்களை உண்ட நமக்குப் போதுமான அளவிற்கு நோய் எதிர்ப்புத் தன்மையும் இருக்கிறது.

சாதாரண விஷயங்களுக்கு நாம் அவ்வளவு எளிதாக பாதிக்கப்படுவது கிடையாது. ஆனால் இன்று இருக்கக்கூடிய குழந்தைகள் போதுமான அளவிற்கு நோய் எதிர்ப்புத் தன்மை இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதற்கு காரணம் உணவு அதுமட்டுமல்லாமல் சத்தான உணவு பொருட்களை நாம் நம் குழந்தைகளுக்கு கொடுப்பதும் இல்லை. அதனை அவர்கள் விரும்பி உண்பத்தும் இல்லை. மாறிவரும் கலாச்சாரத்திற்கு ஏற்ப பீட்சா,பெர்கர், பாஸ்ட்புட் என 
விரும்பியதை உண்கின்றனர்.

இதனால் தேவையில்லாத உடல் உபாதை ஏற்படுகிறது. உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதிலும் கூட சரியான நேரத்தில் சரியான உணவை சாப்பிடாமல் சரியான நேரத்தில் தூக்கம் இல்லாமல் இருப்பதால் உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு நோய்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதில் குறிப்பாக ஒரு சிலர் காலை சிற்றுண்டியை கூட எடுத்துக் கொள்வதைக் கூட தவிர்த்து விடுகின்றனர். இவ்வாறு காலை உணவை தவற விடுபவர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கிய விளைவுகள் என்ன என்பதை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

அதன்படி மிக முக்கியமாக செரிமான கோளாறு:

காலை நேரத்தில் சிற்றுண்டியை தவிர்த்தால் கண்டிப்பாக செரிமான கோளாறு ஏற்படும். காரணம் இரவு நாம் உண்ட பிறகு நீண்ட நேரம் நம் வயிறு காலியாக இருக்கும். பின்னர் காலை நேரத்தில் போதுமான அளவிற்கு நாம் உண்டால் மட்டுமே செரிமானம் சீராக இருக்கும். இதனை தவிர்த்து காலை நேர உணவை தவிர்த்தால் செரிமான கோளாறு கண்டிப்பாக ஏற்படும். அடுத்ததாக சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதால் அல்சர் உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வலி ஏற்படும் மேலும் உணவை எடுத்துக் கொள்வதிலும் சிரமம் ஏற்படும்.வாயில் துர்நாற்றம் வர வாய்ப்பு உண்டு.

இதன் பிறகு பித்தப்பையில் கற்கள் உண்டாக வாய்ப்பு...!

இதனால் வலி ஏற்படும். தேவைப்பட்டால் சர்ஜரி மூலமாகத்தான் கற்களை நீக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

சர்க்கரை நோய்..!

சர்க்கரை நோய் சாதாரணமாக அனைவரிடத்திலும் பார்க்கப்பட்டாலும் கூட அதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது உணவு மட்டுமே. உணவு பழக்கவழக்கத்தில் மாறுபாடு இருந்தால் கட்டாயம் டைப்-2  சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கண்டிப்பாக காலை உணவைத் தவிர்க்கக் கூடாது என்பதை எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும்.

வளர்சிதை மாற்ற கோளாறுகள்..!

வளர்சிதை மாற்றக் கோளாறுகள் ஏற்படுவது தேவையற்ற உடல் பருமன் அதிகரிக்கக்கூடும். இதனால் பல்வேறு சிரமத்தை அனுபவிக்க கூடும். அடுத்ததாக சரியான தூக்கமும் காலை சிற்றுண்டியும் இல்லாமல் இருந்தால் மிக சாதாரணமாக தலைவலி ஏற்படும். இதனால் எந்த ஒரு செயலையும் சீராகவும் விரைவாகவும் செயல்படுத்துவதில் கடினமாக இருக்கும்.

மன அழுத்தம்...!

தேவையான நேரத்தில் உணவு இல்லை என்றால் கட்டாயம் மன அழுத்தம் வரும். எனவே காலை நேரத்தில் தவறாமல் உணவை எடுத்துக்கொள்வது நல்லது .

மூளை செயல்திறன் குறைவு...!

மூளையின் செயல்பாடு காலை நேர உணவை தவிர்ப்பதன் மூலம் மூளையின் செயல்பாடு வெகுவாக பாதிக்கப்படும். முழுமையாக வேலையில் ஈடுபாடு இருக்காது .வேலை மட்டும் அல்லாது வேறு எந்த ஒரு செயலிலும் மும்முரம் காட்ட முடியாது. எனவே காலை சிற்றுண்டியை தவிர்க்காமல் இருப்பது மிகவும் நல்லது.