Difference Between Yogurt and Curd : தயிர் மற்றும் யோகர்ட் இந்த இரண்டில் எதில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

யோகார்ட் என்பது தற்போது மக்களிடையே பரவலாக பரவி வரும் ஒரு உணவுப் பொருளாகும். டயட் இருப்பவர்கள் இதை கண்டிப்பாக தங்களது உணவில் சேர்த்துக் கொள்வார்கள். நம்மில் பலரும் யோகார்ட்டும், தயிரும் ஒன்று தான் என்று நினைத்திருப்போம். ஆனால் அது உண்மை அல்ல. அவை இரண்டும் வெவ்வேறு என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர்.

ஆனால் இது பற்றி தெரியாமல் நாம் தயிரும், யோகார்ட்டும் ஒன்று தான் என்று நினைப்போம். இவற்றின் தயாரிக்கும் முறை, ஊட்டச்சத்துக்கள், நன்மைகளிலும் வித்தியாசம் உண்டு. இவை இரண்டில் எது ஊட்டச்சத்து மிக்கது என்று இங்கு பார்க்கலாம்.

தயிர் மற்றும் யோகார்ட் தயாரிக்கும் முறை:

தயிர் மற்றும் யோகார்ட் இவை இரண்டும் வித்தியாசமான முறையில் தான் தயாரிக்கப்படுகின்றது. எப்படியெனில், பாலை காய்ச்சி அதில் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து திரிய வைத்து தயாரிப்பது தான் தயிர்.

அதுவே, லாக்டோ பேசில்லஸ் பல்கரிகஸ், ஸ்ட்ரெப்டோ காக்கஸ் தெர்மோபில்ஸ் போன்ற பாக்டீரியாக்களை கொண்டு பாலை திரிய வைத்து யோகார்ட் தயாரிக்கப்படுகிறது.

தயிர் மற்றும் யோகார்ட் ஊட்டச்சத்துக்கள் :

  • தயிரில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி6 போன்றவை உள்ளது.
  • யோகார்ட்டில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி12 போன்றவை உள்ளன.

அதுமட்டுமல்லாமல், ஒரு சின்ன கிண்ணம் தயிரில் 3 முதல் 4 கிராம் புரோட்டீன் மட்டுமே இருக்கிறது. அதுவே கிரேக்க யோகார்ட்டில் 8 முதல் 10 கிராம் வரை புரதம் இருக்கிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லிகின்றனர்.

தயிர் மற்றும் யோகார்ட் சுவை வேறுபாடுகள் :

மாங்கோ, ஸ்ட்ரா பெர்ரி, வெண்ணிலா, ப்ளூ பெர்ரி போன்ற வித்தியாசமான சுவையில் யோகார்ட் கிடைக்கின்றன. ஆனால், தயிருக்கோ எந்தவொரு தனி சுவையும் கிடையாது.

தயிர் மற்றும் யோகார்ட் நன்மைகள் :

யோகார்ட் - உடற்பயிற்சி செய்பவர்களுக்கு யோகார்ட் சிறந்தது என்று சொல்லப்படுகின்றது. அதிலும் குறிப்பாக கிரேக்க தயிர் தான் பெஸ்ட்டாம். ஏனெனில், உடற்பயிற்சி செய்யும் போது தசைகள் களைப்பு அடைவதை தடுக்க இது உதவுகிறது. இதன் காரணமாக தான் உடற்பயிற்சி செய்கிறவர்கள் தினமும் யோகர்ட் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று நிபுணர்கள் சொல்லுகிறார்கள். இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்கவும் இது உதவுகிறது.

தயிர் - ஜீரண சக்தியை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படுத்தவும், மூளை செயல்பாட்டுக்கும் தயிர் உதவுகிறது.