தமிழகத்தில் கடந்த 3ம் தேதி 3 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்த தற்போது 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: எடுப்பான முன்னழகை காட்டி... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் யாஷிகா ஆனந்த்... வைரல் போட்டோ...!

தமிழகத்தை கொரோனாவின் கோர பிடியில் இருந்து காப்பதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் ஓய்வின்றி உழைத்து வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இரவு, பகல் பார்க்காமல் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறார். 

மேலும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ், ஆங்கிலத்தில் துண்டுபிரசுரங்களை அச்சடித்து வீடு, வீடாக சென்னை மாநகராட்சி ஊழியர்கள் விநியோகித்து வருகின்றனர். 

தமிழகத்தில் சென்னை, ஈரோடு, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் வீடு, வீடாக சென்று யாருக்காவது கொரோனா பாதிப்பு உள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். சென்னையில் 50 வீடுகளுக்கு ஒரு பணியாளர்கள் வீதம் நியமிக்கப்பட்டு ஆய்வில் இறங்கியுள்ளனர். 

இதையும் படிங்க: பிரபல பாடகி பரவை முனியம்மாவின் கடைசி ஆசை... நிறைவேற்றப்படுமா இறுதி கோரிக்கை?

இந்த ஆய்வின் போது யாருக்காவது காய்ச்சல், இருமல், சளி ஆகிய பிரச்சனைகள் உள்ளதா என்பது குறித்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வின்போது யாருக்காவது பிரச்சினைகள் இருந்தால், அவர்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தல் வழங்கப்படும். சம்மந்தப்பட்டவரின் குடும்பத்தினருக்கு முகக் கவசங்கள் கொடுக்கப்படும். மேலும் அந்தப் பகுதியில் 60 வயதிற்கு மேற்பட்டோர், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளோர் யார்– யார் இருக்கிறார்கள் என்ற பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருக்குமாறு அறிவுறுத்தப்படுவர்.